சல்மான் கானுடன் நடிக்க ரெடி.. திடீரென பரவும் ரஜினிகாந்த் பேச்சு.. அட்லீ இயக்கத்தில் நடிக்கிறாரா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்தின் புரமோஷனுக்காக மும்பைக்கு செல்லும் போது சல்மான் கான் நாளைக்கு ஓகேன்னு சொன்னாலும் அவருடன் இணைந்து நடிக்க ரெடி என பேசிய த்ரோபேக் பேச்சை தற்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே அட்லீ இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என கிளம்பிய ரூமர் தான் என்கின்றனர்.
ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய அட்லீ அடுத்து என்ன படத்தை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்துக் கொண்டே இருக்கிறது. அல்லு அர்ஜுனை அவர் இயக்கப் போவதாகவும் சன் பிக்சர்ஸில் படம் பண்ணப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதன் பின்னர், அல்லு அர்ஜுனை அட்லீ இயக்கவில்லை என தகவல்கள் வெளியாகின. சல்மான் கான் படத்தை தான் அடுத்து அட்லீ இயக்கப் போகிறார் என்கின்றனர். அந்த படத்தில் அவருடன் இணைந்து கமல் நடிக்கப் போகிறார் என்றும் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்றும் தொடர்ந்து வெளியாகி வரும் தகவல்கள் அனைத்துமே ரூமர் தான் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
ஷங்கர் சிஷ்யன்: குருவை மிஞ்சிய சிஷ்யனாக மாறிவிட்டார் ஷங்கரின் சிஷ்யனான அட்லீ. இயக்குநர் ஷஙக்ர் பிரம்மாண்ட இயக்குநர் என இந்திய சினிமாவையே வியக்க வைத்த காலமெல்லாம் மலையேறி போய் அவர் ஃபிளாப் இயக்குநராகவும் அப்டேட்டாகாத இயக்குநர் என்றும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ஆனால், அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கிவிட்டு இந்திக்கு சென்று ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை எடுத்து 1000 கோடி வசூல் தந்த இயக்குநராகவே மாறியுள்ளார். அவரது அடுத்த படம் எப்போது ஆரம்பிப்பார் என்றும் அதன் அறிவிப்புக்காகவே நாடே காத்திருக்கிறது.
படம் தயாரித்து தோல்வி: பாலிவுட்டில் கடந்த ஆண்டு இறுதியில் அட்லீ தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக் படமான பேபி ஜான் படம் படுதோல்வியை சந்தித்தது. அட்லீக்கு பல கோடி ரூபாய் அந்த படத்தின் மூலம் நஷ்டம் என்கின்றனர். இந்நிலையில், அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தீயாக பரவி வருகின்றன.
ரஜினியை இயக்குகிறாரா?: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வரும் சல்மான் கான் அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சல்மான் கானுடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கப் போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், கடந்த சில நாட்களாக ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்றனர். ஆனால், உண்மையில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே அட்லீ இயக்கத்தில் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரத்தில் உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. அட்லீ அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் அவரது அடுத்த படத்தில் யாரெல்லாம் நடிக்கப் போகின்றனர் என்பது தெரியவரும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வரும் நிலையில், அடுத்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் தான் நடிக்கப் போகிறார்.
ராஷ்மிகாவும் இல்லை: மேலும், அட்லீ இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போகிறார் என்கிற தகவலும் வதந்தி தான் என்றும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்தில் தான் காஜல் அகர்வால் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்து வரும் நிலையில், ராஷ்மிகா அட்லீ படத்தில் நடிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











