திமுக தோற்றவுடன் ஸ்டாலினை சந்தித்தது சம்பிரதாயம் இல்லையா?.. ரஜினிகாந்தை மடக்கும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: முதல் முறையாக தேர்தலை சந்தித்து மிகப்பெரிய மக்கள் சக்தியுடன் ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பீர்களா என ரஜினிகாந்திடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, சம்பிரதாயத்துக்காக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என ரஜினிகாந்த் பதிலளித்த நிலையில், அதை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நேற்று முன் தினம் ரவி மோகன் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது வாழ்வில் ஏற்பட்டுள்ள கஷ்டங்களை கண்ணீருடன் பேசியது பெரும் பரபரப்பை பற்ற வைத்தது. பிளாக் மேஜிக் செய்து தன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டனர் என்றும் கெனிஷாவையும் துறத்திட்டாங்க என புலம்பி இருந்தார்.

அந்த செய்தியின் தாக்கம் குறைவதற்குள் நேற்று, ரஜினிகாந்த் திடீரென நடத்திய பிரஸ் மீட் தான் தற்போது ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜய் முதலமைச்சர் ஆன நிலையில், இந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினிகாந்த் இப்படியொரு பிரஸ் மீட் வைத்துள்ளாரே என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
முதலமைச்சரை சந்தித்த கமல்: மு.க. ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான் என பல்வேறு கட்சித் தலைவர்களை முதலமைச்சர் ஆன பிறகு விஜய் நேரில் சென்று சந்தித்தது பெரும் பேசு பொருளானது. ரஜினிகாந்த், கமல்ஹாசனை விஜய் சந்திப்பாரா? என கேள்வி எழுந்தது. ஆனால், விஜய் இருவரையும் நேரில் சென்று இதுவரை சந்திக்கவில்லை. ஆனால், கமல்ஹாசன் முதலமைச்சர் விஜய்யை நேரில் சென்று சந்தித்து சினிமா துறைக்கான சில முக்கிய கோரிக்கைகளையும் வைத்தது பலரது கவனத்தை ஈர்த்தது.
சம்பிரதாயத்துக்காக சந்திக்க மாட்டேன்: கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்தும் முதலமைச்சராக மாறியுள்ள விஜய்யை சந்திப்பாரா என அவர் நடத்திய பிரஸ் மீட்டின் போது பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பிரதாயத்துக்காக சந்திக்கப்போவதில்லை என தனது நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டார்.
ப்ளூ சட்டை மாறன் கேள்வி: "திமுக தோற்றவுடன் ஸ்டாலினை சந்தித்தது சம்பிரதாயம் இல்லையா?" என ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்தை மடக்கி கேள்வி எழுப்பியுள்ளார். மு.க. ஸ்டாலின் தனது 40 ஆண்டுகால நண்பர் என்றும் கொளத்தூரில் அவர் தோல்வியடைந்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகவே சந்தித்தேன் என்றும் ரஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications