"இருங்க.. இருங்க".. கார் டிரைவரை திடீரென எச்சரித்த ரஜினிகாந்த்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் இமயமலைக்கு செல்ல உள்ள நிலையில், தனது காரில் புறப்பட்டு சென்றபோது நடிகர் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் ஓடிவந்து சந்தித்தனர். செய்தியாளர்கள் கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க முற்படும் போது, அவரது டிரைவர் சட்டென வண்டியை எடுத்ததால் ஒரு நிமிடம் டென்ஷன் ஆகிவிட்டார்.
பத்திரிகையாளர்களை எப்போதுமே மதித்து அவர்கள் கேட்கும் கேள்விக்கு முடிந்தவரை பதிலளித்து, பதிலளிக்க விரும்பாத கேள்விகளுக்கு "நோ கமெண்ட்ஸ்" என சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அபுதாபிக்கு சென்று வந்த ரஜினிகாந்த் தற்போது இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்க காத்திருக்கிறாள் ரஜினிகாந்த்.
இமயமலைக்கு புறப்பட்ட ரஜினிகாந்த்: ஆண்டுதோறும் இமயமலைக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக இமயமலைக்கு செல்லாமல் இருந்து வந்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார். ரிஷிகேஷ், கேதார்நாத் உள்ளிட்ட ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்திடம் ஆசி: ஜெயிலர் படம் ரிலீசான சமயத்தில் வட இந்தியாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று வந்தார். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவரது இல்லத்தில் சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரஜினிகாந்தின் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது தந்தை ரஜினிகாந்த் சங்கி அல்ல என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புலம்பினார். சங்கி என்கிற வார்த்தை தவறான வார்த்தை அல்ல என்று சூப்பர் ஸ்டார் அதன் பின்னர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி ராமர் கோயில்: அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். அயோத்திக்கு சென்ற நிலையில் அங்குள்ள கிருஷ்ணர் கோயிலுக்கும் சென்று வழிபட்டு வந்த ரஜினிகாந்த் தற்போது இமயமலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
இசையா? மொழியா?: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த செய்தியாளர்கள் இசைப் பெரியதா? மொழி பெரியதா என்கிற கேள்வியை கேட்க அதற்கு "அண்ணா நோ கமெண்ட்ஸ்" என சொல்லிவிட்டு ரஜினிகாந்த் கிளம்பினார். விரைவில் கூலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் வேட்டையன் திரைப்படம் நல்லா வந்திருப்பதாகவும் கூறினார்.
டிரைவருக்கு எச்சரிக்கை?: நடிகர் ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை சந்தித்த செய்தியாளர்கள் ஓடி வந்து பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும்போது சட்டென ரஜினிகாந்தின் கார் டிரைவர் வண்டியை நிறுத்தாமல் எடுப்பது போல நகர்ந்த நிலையில் கடுப்பான ரஜினிகாந்த் " இருங்க.. இருங்க" என எச்சரிக்கை விடுக்க கார் உடனடியாக நிறுத்தப்பட்டது. செய்தியாளர்களை எப்போதுமே ரஜினிகாந்த் அலட்சியப்படுத்த மாட்டார் என்று அவரது ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படம் வரும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபரில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











