Padayappa Re Release Collection: கில்லி வசூலை ஓரம் தள்ளிய படையப்பா.. தலைவரின் தரமான சம்பவம்
சென்னை: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 75வது பிறந்தநாளை நேற்று முன்தினம் வெகு விமர்சியாக கொண்டாடினார். இந்த நாளில் தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு நிதி வசூலிக்கும் விதமாக, அவரது மிகப்பெரிய வெற்றிப் படமான 'படையப்பா' நேற்று முன்தினம் அதாவது டிசம்பர் 12ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட்டு, திரையரங்குகளில் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலேயே, இப்படம் உலக அளவில் ரூபாய் 6 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் திரைப் பயணம் 1975 ஆம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலம் தொடங்கியது. குறுகிய காலத்திலேயே அவர் 'சூப்பர் ஸ்டார்' என்ற அந்தஸ்தை திரையுலகில் எட்டினார். அவரது 25வது ஆண்டு திரை வாழ்க்கையில், அதாவது 1999 ஆம் ஆண்டில் 'படையப்பா' திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரஜினிகாந்த் கதை அமைத்து தயாரித்ததோடு, நடித்தார். கே.எஸ். ரவிக்குமார் திரைக்கதை, வசனங்கள் எழுதி இயக்கிய இத்திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. படத்தில் ரஜினி கதாபாத்திரம் மிகவும் மாஸாக தெரிய காரணமே ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த கதாபாத்திரமான நீலாம்பரி கதாபாத்திரம் தான்.

ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டும், அவரது 50 வது திரைப்பட ஆண்டை முன்னிட்டும் , 'படையப்பா' மீண்டும் திரையிடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படம் வெளியானது.
வசூல் : இதனால் படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 4 கோடிகளும் வெளிநாட்டில் ரூபாய் 2 கோடிகளும் வசூலித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ரீ ரிலீஸில் விஜயின் கில்லி படம் தான் தமிழ் திரையுலகில் அதிக வசூலைக் குவித்த படமாக இருந்தது. அதாவது கில்லி படம் முதல் நாளில் ரூபாய் 4 கோடிகள் வசூலித்ததாக அப்போது தகவல்கள் வெளியானது. இப்படி இருக்கும்போது அந்த சாதனையை படையப்பா முறியடித்துள்ளது என்று தகவல்கள் கோலிவுட்டை ஆக்கிரமித்துள்ளது.

எதிர்பார்ப்பு: அதேபோல் கில்லி படத்தின் மொத்த ரீ ரிலீஸ் வசூலையும் படையப்பா படம் அசால்ட்டாக முறியடித்துவிடும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு என இந்த மூன்று நாட்களிலும் முக்கியமான நகரங்களில் பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் படத்தை பார்க்க, வரிசை கட்டி ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் நின்றது தொடர்பான வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில் படத்தின் வசூல் தொடர்பான தகவல்கள் கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











