கில்லியை ஓரம் போகச் சொல்லுங்க.. சொல்லி அடிக்கும் படையப்பா.. ரீ ரிலீஸில் இப்படி ஒரு சாதனையா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை எழுதி, தயாரித்து நடித்த படம் படையப்பா. இந்த படம் அவரது திரை வாழ்க்கையின் 25 ஆவது ஆண்டில் வெளியானது. தற்போது அவர் திரை வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்து 50 ஆவது ஆண்டில் இருக்கிறார். நாளை அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 75 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு பர்த் டே டிரீட் கொடுக்கும் விதமாக ரஜினிகாந்த் எடுத்த முடிவு தான் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்வது எனும் முடிவு. நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ புக்கிங்கில் படம் சாதனையை படைத்துள்ளது.

அதாவது இதுவரை தமிழில் பல நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. உச்ச நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு என பலரது படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் அதிக வசூலை ஈட்டிய படம் என்றால் அது நடிகர் விஜய்யின் கில்லி படம் தான். கில்லி படம் ரூபாய் 25 கோடிகள் வரை ரீ ரிலீஸில் வசூலித்ததாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கும்போது, இதுதான் தமிழ் சினிமாவில் ரி ரிலீஸில் அதிக வசூல் சாதனை படைத்த படமாகவும் பார்க்கப்படுகிறது. அதன் பின்னரும் கூட விஜய்யின் சச்சின், பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த படங்களுக்கு இந்த அளவுக்கு வசூல் கிடைக்கவில்லை.

Rajinikanth Padayappa Re Release Creates Record 15 Thousand Tickets Sales It Overtakes Vijay Ghilli

ரீ ரிலீஸில் புதிய சாதனை: இப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படம் நாளை அதாவது டிசம்பர் 12ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. படம் நாளை தான் ரீ ரிலீஸ் ஆகிறது என்றாலும், படத்திற்கான டிக்கெட் புக்கிங் என்பது புது படத்திற்கான ரிலீஸ் போல உள்ளது என்று கூறப்படுகிறது. சென்னையில் இயங்கும் மிகவும் முக்கியமான தியேட்டர்களில் ஒன்றான ரோகிணி தியேட்டர் நிர்வாகம் அவர்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்ட படம் என்ற சாதனையை படையப்பா படம் பெற்றுள்ளது. இந்த சாதனையை படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். மேலும் இந்த சாதனையை படைக்க காரணமான சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கும் நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

Rajinikanth Padayappa Re Release Creates Record 15 Thousand Tickets Sales It Overtakes Vijay Ghilli

வசூல் சாதனையும் உறுதி: படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் ரூபாய் 100இல் இருந்து ரூபாய் 190 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. படத்தின் வசூல் கணக்கும் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் என்று இணையவாசிகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் சிலரோ, கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வசூல் சாதனையை படையப்பா படம் அசால்ட்டாக முறியடிக்கும் என்றும் தெரிவித்து வருகிறார்கள். படம் ரீ ரிலீஸ்க்கு முன்னரே சாதனை படைத்து விட்டது. ரீ ரிலீஸ் ஆகி வசூலிலும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்ததில் தலைவரும் தலைவர் ரசிகர்களும் உற்சாக வெள்ளத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X