ரீ ரிலீஸில் படையப்பாவைப் பார்க்க வந்த மகள்.. கூட்டத்துக்கு நடுவில் இப்படி தவிச்சு போயிட்டாங்களே!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படமான படையப்பா படம் இன்று அதாவது ரஜினியின் 75வது பிறந்தாளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்றுள்ளார்கள். இது தொடர்பான பல வீடியோக்கள் இன்று காலை முதலே இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. இந்நிலையில் நடிகையும் இயக்குநர் ஹரியின் மனைவியுமான பிரிதா ஹரி படம் பார்க்க வந்தார். அப்போது அவர் ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவே மாட்டிக் கொண்டார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 1999ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், சிவாஜி, மணிவண்ணன், நாசர், ராதாரவி, செந்தில், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் படையப்பா. இந்த படத்தின் கதையை உருவாக்கி, தயாரித்து நடித்திருந்தார் ரஜினிகாந்த். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர், சூப்பர் ஸ்டாரின் 75வது பிறந்த நாள், 50 ஆண்டு திரை வாழ்க்கையில் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளார்கள்.

ரசிகர்கள் கொண்டாட்டம்: படத்தில் சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்தவர்களில் நடிகர் விஜயகுமாரின் மகள், இயக்குநர் ஹரியின் மனைவியான நடிகை பிரிதா ஹரியும் ஒருவர். படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆனதால் படத்தைப் பார்க்க அவர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது படம் பார்க்க கூடியிருந்த ரசிகர்கள் பட்டாளம் தியேட்டரையே திக்குமுக்காடச் செய்திருந்தது. இது மட்டும் இல்லாமல், ரசிகர்கள் தியேட்டருக்கு வெளியே கொண்டாட்ட மன நிலையில் இருந்தனர்.
ரஜினி மகள்: பிரபலங்கள் பலரும் படம் பார்க்க ரோகிணி தியேட்டருக்கு வந்து கொண்டே இருந்தார்கள். இப்படி இருக்கும்போது, பிரிதா ஹரி படத்தைப் பார்க்க வந்தார். கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்ட அவர் ஒரு வழியாக போராடி தியேட்டர் வளாகத்தை தனது தோழிகளுடன் அடைந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











