Dharmendra: தர்மேந்திரா மறைவு.. உங்க பொன்னான மனசை எப்போதுமே மறக்கமாட்டேன்.. ரஜினிகாந்த் இரங்கல்
சென்னை: பாலிவுட்டின் ஹீமேன் என அழைக்கப்பட்டு வந்த மூத்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. தர்மேந்திராவுடன் இணைந்து சில இந்தி படங்களில் நடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர் தன்னை விட்டு போய்விட்டாரே என்கிற துக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவு ரசிகர்களை உருக வைத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக தீவிர உடல்நல பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தர்மேந்திரா குறித்த மோசமான வதந்திகள் வெளியானது, அவரது குடும்பத்தினரை காயப்படுத்தியது.

தர்மேந்திரா சிகிச்சைக்கு ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார் என்றும் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை என மனைவி ஹேமா மாலினி தெரிவித்து இருந்தார். ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டார் தர்மேந்திரா.
அமிதாப் பச்சன் முதல் அமீர்கான் வரை: ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமே தர்மேந்திராவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. அமிதாப் பச்சன், அமீர்கான் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் தர்மேந்திராவின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொண்டனர். ஹேம மாலினி, சன்னி தியோல், பாபி தியோல், இஷா தியோல் என குடும்பத்தினரும் துக்கம் தாள முடியாமல் இறுதிச்சடங்கில் பங்கேற்று தர்மேந்திராவுக்கு இறுதி மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.
ரஜினிகாந்த் இரங்கல்: Insaaf Kaun Karega, Farishtay உள்ளிட்ட சில பாலிவுட் படங்களில் தர்மேந்திராவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், தனது எக்ஸ் தள பதிவில், "Farewell, my friend. I will always remember your golden heart and the moments we shared. Rest in peace, Dharam ji. My deepest condolences to his family." என நல்ல நண்பரை பிரிந்த துக்கத்தில் அவருடன் பழகிய நாட்கள் மற்றும் இணைந்து பணியாற்றிய தருணம், அவரது தங்கமான மனசு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











