பரட்டை வந்திருக்கேன் எந்திரி பாரதிராஜா.. இயக்குநர் இமயம் மறைவு.. ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
சென்னை: தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திச்சென்றுள்ளார் இயக்குநர் இமயாம் பாரதிராஜா. அந்த செய்தியை கேட்டவுடன், நடிகர் ரஜினிகாந்த் சில நிமிடங்கள் பேச முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். தனது நீண்டகால நண்பரையும், தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தத்தையும் இழந்த வேதனை அவரது முகத்தில் தெரிந்தது.
பின்னர் சென்னை, நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்த ரஜினிகாந்த், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது கண்கள் கலங்கியிருந்தன. அவருடன் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்களும் உடனிருந்தனர்.

அங்கு கூடியிருந்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் அமைதியாக அவரது பேச்சைக் கேட்டனர். சிலர் கண்கலங்கினர். ரஜினிகாந்த் பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, "அவருடைய படைப்புகள் என்றும் உயிருடன் இருக்கும்" என்று தெரிவித்தார்.
16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் நடிக்க வைத்து அசத்திய இயக்குநர் இமயம் இன்று நம்முடன் இல்லை. "பத்த வச்சிட்டியே பரட்ட" என்கிற வசனமும் பரட்டை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் "இது எப்படி இருக்கு" என நடித்ததும் பாரதிராஜா இயக்கத்தில் தான்.
பரட்டை என்கிற அழகு சுந்தரம் என தனுஷும் அந்த பரட்டையை மறக்காமல் தனது படத்திற்கே தலைப்பாக வைத்து நடித்திருந்தார். பாரதிராஜாவின் நீண்ட கால நண்பரான ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சிகள் ரசிகர்களை உருக வைத்துள்ளன.
முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சிவகுமார், சூர்யா, ராதிகா சரத்குமார், சீமான், வைரமுத்து, மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். விஜய் சேதுபதி, ரவி மோகன், விஷால் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக வலைதளத்தில் தங்களது அதிர்ச்சியை பதிவு செய்துள்ளனர்.
மோகன்லால், சிரஞ்சீவி, பவன் கல்யாண் உள்ளிட்ட தென்னிந்திய சினிமா ஜாம்பவான்களும் இயக்குநர் இமயத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications