கனத்த இதயத்துடன் தனக்கு பிடித்த இயக்குநர் மகேந்திரனுக்கு ரஜினி அஞ்சலி
Recommended Video

சென்னை: இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு ரஜினிகாந்த் கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். சென்னை பள்ளிக்கரணையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

என்னை எனக்கே அடையாளம் காட்டியவர் மகேந்திரன். நடிப்பில் புதிய பரிமாணத்தை கற்றுக் கொடுத்தவர் என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை ஆகிய படங்களில் ரஜினிகாந்த் மகேந்திரனுடன் சேர்ந்து வேலை செய்துள்ளார். எனக்கு பிடித்த இயக்குநர் மகேந்திரன் தான் என்று தன்னை அறிமுகம் செய்து வைத்த பாலசந்தரிடமே தெரிவித்தவர் ரஜினிகாந்த்.
ரஜினி ஒரு சிறந்த கேரக்டர் ஆர்டிஸ்ட். ஆனால் தற்போதைய தலைமுறைக்கு அவரின் ஸ்டைல் மட்டும் தான் தெரிகிறது என்று முன்பு மகேந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











