வாவ்.. தனக்குத்தானே பஞ்ச் டயலாக் எழுதிய ரஜினி.. அண்ணாத்த படத்தின் அசத்தல் அப்டேட்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் தனக்கு தானே பஞ்ச் டயலாக் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ் உட்பட ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறது.

விரைவில் ஷூட்டிங்

விரைவில் ஷூட்டிங்

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஊர் தலைவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் சில வலுவான வசனங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

பஞ்ச் டயலாக்குகள்

பஞ்ச் டயலாக்குகள்

தான் சார்ந்த காட்சிகளுக்காக ரஜினிகாந்த் டிசம்பர் அல்லது ஜனவரியில் படப்பிடிப்பில் சேரலாம் என்று அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்து அசத்தல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் அவருக்காக ஒரு சில பஞ்ச் வசனங்களை எழுதியுள்ளாராம்.

அட்டகாசம்

அட்டகாசம்

தனக்காக எழுதிய பஞ்ச் டயலாக்குகளை நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் தெரிவித்ததாகவும் அதனை கேட்ட சிறுத்தை சிவா அட்டகாசமாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக்குகள் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையல்ல

முதல் முறையல்ல

மேலும் இது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கான பஞ்ச் வசனங்களை எழுதுவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே 'பாபா' உள்ளிட்ட சில படங்களில் அவருக்கான சில பஞ்ச் டயலாக்குகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X