’பேட்ட’ படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறாரா ரஜினி? லீக்கானது கதை
Recommended Video

சென்னை: பேட்ட திரைப்படத்தின் கதை லீக் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் பேட்ட. மல்டி ஸ்டாரர் படமாக தயாராகி வரும் அதன் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

வட இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டனாக ரஜினி இருக்கிறார். அப்போது அங்கு மாணவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையின் போது ரஜினியின் உண்மையான பின்னணி என்ன என்ற பிளாஷ் பேக் ஓபன் ஆகுமாம். பாட்ஷா படத்தில் மும்பையில் தாதாவாக இருந்ததுபோல இப்படத்தில் மதுரையில் ரவுடி என்கிறார்கள்.
ஃபிளாஷ்பேக்கில் வெள்ளை வேட்டி சட்டையுடன் மதுரையில் மிகப்பெரிய ரவுடியாக இருப்பாராம். அப்படி இருக்கும் ரஜினி வட மாநிலக் கல்லூரியின் ஹாஸ்டலில் வார்டனாக பணியாற்றுகிறார். அசத்தலான ரவுடியாக இருந்த ரஜினி ஏன் வட இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரி ஹாஸ்டலில் வார்டனாக பணியாற்ற வேண்டும்? என்ற கேள்வியுடன் கதை பயணிக்கும் என சொல்லப்படுகிறது.
பாபி சிம்ஹா என்ற புதிய நடிகரை 'சேது' என மிரட்டும் வில்லனாக பதியவைத்தவர் கார்த்திக் சுப்புராஜ். மேலும் ரஜினிக்கு ரவுடியாவது ஒன்றும் புதிதில்லை என்பது தெரிந்த விஷயம்.
மகேந்திரனும் பேட்ட படத்தில் நடிப்பது உறுதியானது. சமீபத்தில் அவர் லக்னோவில் ரஜினியை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகின. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்கி, குரு சோமசுந்தரம், மேகா ஆகாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications