பராசக்தியை பாராட்டிய ரஜினிகாந்த்.. தலைவர் என்ன சொன்னாரு தெரியுமா?.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் பராசக்தி. இது அவருக்கு 25ஆவது படமாகும். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா என பலர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு பலரிடமிருந்தும் பாராட்டு வருகிறது. அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் பராசக்தி படத்தை பாராட்டியதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணி முதன்முறையாக இணைந்த படம் பராசக்தி. இதில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 60களில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குந்ர். உண்மை சம்பவத்தை தழுவி படமாக எடுப்பதில் சுதா கில்லி. சூரரைப் போற்று படமும் உண்மை சம்பவத்தை வைத்துதான் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத். அது மெகா ஹிட்டானதோடு மட்டுமில்லாமல் தேசிய விருதையும் வென்றது.

இதற்கும் எதிர்பார்ப்பு: எனவே சிவாவுடன் இணைந்திருக்கும் பராசக்தி படத்துக்கும் ஓவர் ஹைப் ஏறியது. எந்தப் படத்துடன் வேண்டுமானாலும் போட்டிப்போட தயாராக இந்தக் கதைக்களத்தோடு இறங்கலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருந்தது. படத்தின் ட்ரெய்லர் அந்த அளவுக்கு நம்பிக்கையை கொடுத்தது. மேலும் கமர்ஷியலாகவும் ஒரு படத்தை சுதா இயக்குவதில் கெட்டிக்காரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Phones Sivakarthikeyan to Praise Parasakthi Says Second Half Is Brilliant
Photo Credit:

அப்படியே நடந்தது: எதிர்பார்த்தபடியே இதை ஒரு ஆவணப்படமாக மட்டும் எடுத்துவிடாமல் கமர்ஷியல் தன்மைகளோடும் சேர்த்து ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமாக படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். அமரன் படத்துக்கு பிறகு மிக முக்கியமான இடத்தை எஸ்கே கரியரில் பராசக்தி பிடிக்கும் என்றும்; எஸ்கே மாதிரியே ரவி மோகனும் இதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட்டார் என்று உச்சக்கட்டமாக புகழ்ந்துவருகிறார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி கமல்ஹாசன் உள்ளிட்டோரும் தங்களது பாராட்டை தெரிவித்தார்கள்.

ரஜினியின் பாராட்டு: அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் பராசக்தி படத்தை பாராட்டினார் என்று நன்றி தெரிவிப்பு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கூறினார். விழாவில் இதுகுறித்து அவர் பேசுகையில், "கமல்ஹாசன் ஐந்து நிமிடங்கள் இந்தப் படத்தை பாராட்டினார். அவர் அப்படி பேசுவது எல்லாம் கஷ்டம். அவரைத் தொடர்ந்து என் தலைவர் நடிகர் ரஜினிகாந்த் ஃபோன் செய்தார். ரொம்ப போல்டான திரைப்படம். நன்றாக நடித்திருக்கிறீர்கள் சிவகார்த்திகேயன். இரண்டாவது பாதி அருமையாக இருந்தது என பாராட்டினார்" என்றார்.

வசூல் வேட்டை: இப்படி விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் அந்தப் படம் வசூலிலும் சக்கைப்போடு போட்டுவருகிறது. உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் 51 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க Sacnilk இணையதள தகவல்படி இரண்டு நாட்களில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்டா 25 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாக தரவுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அமரன் படம் எப்படி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிரபலமானதோ அதேபோல் பராசக்திக்கும் நடக்கக்கூடிய அத்தனை வாய்ப்புகளும் இருப்பதாக திரைத்துறை வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். இன்றைய நாள் கொஞ்சம் கூட்டம் குறைந்துவிட்டது உண்மைதான் என்றும்; பொங்கல் விடுமுறை ஆரம்பித்துவிட்டதால் கண்டிப்பாக வரும் நாட்களில் படம் பிக்கப் ஆகிவிடும் என தியேட்டர் வட்டாரத்திலிருந்து குரல்கள் கேட்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X