பேரனோடு கிரிக்கெட் விளையாடிய ரஜினி.. ஸ்தம்பித்துப்போன இளையராஜா.. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

சென்னை: இமய மலைக்கு போக முடியாத குறையை இளையராஜா வீட்டுக்கு சென்று போக்கி வருகிறாராம் நடிகர் ரஜினிகாந்த்.

இருவரும் ஆன்மிக ரீதியாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த நிலையில், இளையராஜாவின் பேரன் ரஜினிகாந்தை கிரிக்கெட் விளையாட அழைக்க அவரும் உடனடியாக ஓடிச் சென்று விளையாடியதை பார்த்து இளையராஜாவே ஷாக் ஆகி விட்டாராம்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தலைவர் 169 படத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்செட்டில் ரஜினி

அப்செட்டில் ரஜினி

மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் இடையே சமீபத்தில் ஏற்பட்ட விவாகரத்து பிரச்சனை நடிகர் ரஜினிகாந்தை மிகவும் மனதளவில் பாதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. முன்பை போல மன நிம்மதியைத் தேடி இமய மலைக்குச் செல்ல அவருடைய வயதின் காரணமாக உடல் ஒத்துழைக்கவில்லை என்கின்றனர்.

மன நிம்மதியைத் தேடி

மன நிம்மதியைத் தேடி

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா வீட்டுக்கு மன நிம்மதியைத் தேடி நடிகர் ரஜினிகாந்த் செல்வதாக கூறுகின்றனர். ஆன்மிகத்தில் அதிக பற்றுக் கொண்ட இளையராஜா உடன் பேசுவது ரஜினிகாந்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதால், அடிக்கடி அவருக்கு போன் செய்து விட்டு சென்று வருகிறாராம்.

கிரிக்கெட் விளையாடிய ரஜினி

கிரிக்கெட் விளையாடிய ரஜினி

சமீபத்தில் இளையாராஜாவுடன் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும் போது கார்த்திக் ராஜாவின் மகன் யதீஷ்வர் அங்கிள் என்னோட கிரிக்கெட் விளையாட வர்றீங்களா எனக் கேட்க, உடனடியாக வர்றேன் கண்ணா என யதீஷ்வருடன் விளையாட சென்றது இளையராஜாவையே ஷாக்காக்கி விட்டதாம்.

மகிழ்ச்சியாக

மகிழ்ச்சியாக

தனது பேரனோடு மகிழ்ச்சியாக ரஜினிகாந்த் பந்து போட்டும், பேட்டை எடுத்து சுழற்றி அடித்தும் விளையாடியதை பார்த்து இளையராஜாவும் ரொம்பவே சந்தோஷப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விசில் அடித்து பாட்டு பாடுதல், இளையராஜாவை பாடச் சொல்லி கேட்பது என ரஜினிகாந்த் இளையராஜா வீட்டில் மகிழ்ச்சியாக இருப்பது குறித்த தகவல்கள் காத்துவாக்குல கசிந்து வருகின்றன.

தலைவர் 169

தலைவர் 169

துபாய் டூரை பிரியங்கா மோகன், கவின் என தனது கேங்குடன் கொண்டாடி வரும் இயக்குநர் நெல்சன் கூடிய விரைவில் தலைவர் 169 படத்துக்கான பணிகளை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கப் போவதாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X