தர்பார்: நிவேதா தாமஸ் ரஜினி மகள் தான், ஆனால் நயன் அம்மா இல்லை
சென்னை: தர்பார் படத்தில் நிவேதா தாமஸ் ரஜினிகாந்தின் மகளாகத் தான் நடிக்கிறாராம்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வரும் தர்பார் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதையடுத்து வரும் 29ம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் துவங்குகிறது.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த புகைப்படத்தில் ரஜினியுடன் நிவேதா தாமஸ் இருந்தார். ரஜினி மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் என்று கூறப்பட்டது. தற்போது அந்த தகவல் உண்மையே என்பது தெரிய வந்துள்ளது.
நிவேதா ரஜினியின் மகளாகத் தான் நடிக்கிறாராம். அப்படி என்றால் நயன்தாரா தான் அம்மாவா என்று பதற வேண்டாம். நிவேதாவுக்கு அம்மா நயன் இல்லை. தர்பார் படத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். தாதா, போலீஸ் என்று இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாதா ரஜினியின் மகள் நிவேதாவாம், போலீஸ் ரஜினியின் ஜோடி நயன்தாராவாம். வழக்கம் போன்று இந்த தகவலையும் ஏ.ஆர். முருகதாஸ் உறுதி செய்யவில்லை. அவர் உறுதி செய்யாவிட்டாலும் கதை பிட்டு, பிட்டாக கசிந்து கொண்டிருக்கிறது.
மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோக்களும் கசிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











