'அருவி' படத்திற்காக அவரிடமிருந்து வந்த போன்கால்... நெகிழும் படக்குழு!
சென்னை : அறிமுக நடிகை அதிதி பாலன் நடிப்பில் புதுமுக இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான படம் அருவி.
இப்படம் ஏற்கனவே பல விருது விழாக்களில் கலந்து பாராட்டுகளை பெற்றது. தற்போது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வர்த்தக ரீதியாகவும் நல்ல வசூல் செய்து வருகிறது.
'அருவி' படத்தை ஏற்கெனவே பல முன்னணி நடிகர்களும், இயக்குநர்களும் பார்த்து புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.
ரஜினிகாந்த் பாராட்டு
இந்நிலையில் இயக்குனர் அருண் பிரபுவுக்கு நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாம். அவர் அருவி படத்தை பாராட்டி பேசினாராம். இது பற்றி இயக்குனர் அருணபிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சூப்பர்ஸ்டாரிடமிருந்து போன்
உச்சம் தொடும் அன்பின் கொடி. ஆம். ஒரு தொலைபேசி அழைப்பு. சூப்பர்ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து. மகிழ்ச்சி... மகிழ்ச்சி... மகிழ்ச்சியோ மகிழ்ச்சி என ட்வீட் செய்துள்ளார் அருண்பிரபு புருஷோத்தமன்.
மகிழ்ச்சி
ரஜினி சார் 'அருவி' டீமை அழைத்துப் பாராட்டியதால் உருவான உற்சாகத்தை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.. மகிழ்ச்சி என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அருவி ஹீரோயின் அதிதி பாலன்.
இங்கும் அங்கும் எங்கும்
இங்கும் அங்கும் எங்கும் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டு சூப்பர்ஸ்டார் வாழ்த்திய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
ப்ரொபைல் படம்
நடிகர் ஜெயம் ரவி நேற்று 'அருவி' படத்தின் போஸ்டரை தனது ப்ரொபைல் பிக்சராக ட்விட்டரில் வைத்திருந்தார். இதுவும் அருவி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











