’கல்கி’ படத்தை பார்த்த ரஜினிகாந்த்.. கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸுக்கு பாராட்டு!

சென்னை: கல்கி 2898 ஏடி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்து விட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் படத்தை மனதார பாராட்டியுள்ளார். இயக்குநர் நாக் அஸ்வின் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக ஒரு படத்தை இதிகாசத்தையும் சயின்ஸ்ஃபிக்‌ஷனையும் பிளெண்ட் செய்து கொடுத்துள்ள விதம் வியக்க வைக்கிறது எனக் கூறியுள்ளார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி, சோபனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 191 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

Rajinikanth Kalki Prabhas

2 நாட்களில் 300 கோடி ரூபாய் வசூலை அந்த படம் நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் கல்கி படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

சூர்யா முதல் சூப்பர் ஸ்டார் வரை: கங்குவா படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள நிலையில், அதே போல பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தை பார்த்து விட்டு முதல் ஆளாக நடிகர் சூர்யா படத்தை பாராட்டினார். நாக் அஸ்வின் மற்றும் பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கல்கி 2898 ஏடி படத்தை பாராட்டியுள்ளார்.

Rajinikanth Kalki Prabhas

ரஜினிகாந்த் பாராட்டு: ” கல்கி படம் பார்த்துட்டேன்.. வாவ் என்னமாதிரியான படம் இது. இயக்குநர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை எங்கேயோ கொண்டு சென்று விட்டார். தயாரிப்பாளர் அஸ்வினி தத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள். படத்தில் நடித்த அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன் என அனைவருக்குமே வாழ்த்துகள். அடுத்த பார்ட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

சிரஞ்சீவி பாராட்டு: மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் கல்கி 2898 ஏடி படத்தை பார்த்து விட்டு அமிதாப் பச்சன், கமல் சாரின் நடிப்பு பிரம்மாதம். நாக் அஸ்வின் பிரம்மாண்ட படத்தை உருவாக்கி அசத்திட்டார். பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் என முன்னதாக பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X