chithha: சித்தா படம் குறித்து ரஜினி சொன்ன அந்த வார்த்தை.. நெகிழ்ந்து போன சித்தார்த்!
சென்னை: (chithha) சித்தா படம் குறித்து ரஜினிகாந்த் பாராட்டியதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் நடிப்பில் இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் சித்தா.

கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேர்மறை விமர்சனங்களை பெற்று, கணிசமான வசூலை அள்ளி வருகிறது.
சித்தா: பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி உள்ள திரைப்படம் சித்தா. இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை.
குவியும் பாராட்டு: சித்தா படம் தொடர்பாக பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள திரையரங்க நிர்வாகங்கள் சித்தா படத்துக்கான காட்சிகளை அதிகரித்துள்ளன. சித்தார்த்தின் திரைப்பயணத்தில் இத்திரைப்படம் ஒரு முக்கியமான படமாக மாறி உள்ளது.

அவமானப்படுத்தினாங்க: தமிழ், மலையாளம், கன்னடா போன்ற மொழிகளில் சித்தா திரைப்படம் கடந்த வாரமே வெளியானநிலையில், கிட்டத்தட்ட 1 வாரத்திற்கு பிறகு, அதாவது இன்று தெலுங்கில் சின்னா என்ற பெயரில் வெளியாகி உள்ளது. சின்னா திரைப்படத்தின் தெலுங்கு பட ப்ரோமோஷன் விழா ஒன்றில் பேசிய நடிகர் தெலுங்கில் சித்தார்த் படத்தை யாரு பார்ப்பாங்க என்று அவமானப்படுத்தியதாக கண்கலங்கி பேசி இருந்தார்.
ரஜினி சொன்ன அந்த வார்த்தை: இந்நிலையில்,பேட்டி ஒன்றில் பேசிய சித்தார்த் ரஜினி சார் எனக்கு கால் பண்னாங்க, என் படத்தை பத்தி கேள்விபட்டதாவும், வீட்டுக்கு திரும்புன உடனே படத்தை நிச்சயம் பார்க்க போகிறேன் என்று சொன்னாரு, என் படத்தை பத்தி அவருக்கு தெரிஞ்சிருக்கு, அதை கேள்விபட்டு பார்க்க ஆசைப்படுறாருன்னு சொல்லும்போது இதெல்லாம் நடக்குமா என்று கூட யோசிக்கவில்லை, ஆனால் நடந்து இருக்கு என்று சித்தார்த்தை நெகிழ்ந்து பேசினார்.


Click it and Unblock the Notifications











