கைலாசத்தையும் வைகுண்டத்தையும் கொண்டு வந்த அம்பானி.. ரஜினிகாந்த் என்ன இப்படி சொல்லிட்டாரு!
ஜாம் நகர்: சுமார் 1000 கோடி செலவில் முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழாவை நடத்தி வருகிறார். பல சினிமா பிரபலங்கள் திருமணத்துக்கு அழைத்தாலே செல்ல முடியாமல் படப்பிடிப்பு இருக்கு என பந்தா காட்டி வரும் நிலையில், இந்தியாவின் பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரையும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கே அழைத்து வந்து அமர்க்களப்படுத்தி உள்ளார் அம்பானி.
ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்துக்கு அம்பானி வந்து கலந்து கொண்ட நிலையில், தற்போது அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் கலந்து கொண்டுள்ளார்.

அமிதாப் பச்சன் முதல் ஆலியா பட் வரை: பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் மூன்று கான் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர் கான் மற்றும் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆலியா பட், மலைகா அரோரா, அர்ஜுன் கபூர், போனி கபூ, ஜான்வி கபூர், குஷி கபூர், அனன்யா பாண்டே, அட்லீ, ராம்சரண் என பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் இருந்து பிரபலங்கள் யாரும் பங்கேற்றது போல தெரியவில்லை.
கைலாசமும் வைகுண்டமும்: நாட்டிற்கே பெருமைத்தேடி வரும் வகையில் தனது மகன் அனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய விழாவை முகேஷ் அம்பானி மற்றும் நிடா அம்பானி நடத்தி வருகின்றனர். ரொம்ப சூப்பரா இருக்கு, கைலாசத்தையும் வைகுண்டத்தையும் அப்படியே நம்ம பூமிக்கு கொண்டு வந்ததை போல அம்பானி தனது மகன் திருமண விழாவை நடத்தி வருகிறார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். சமீபத்தில் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்ற ரஜினிகாந்த் அதை தாஜ்மகால் என்றார். சசிகலா புதிதாக கட்டிய வீட்டுக்கு சென்ற போது கோயில் போல உள்ளது என்று அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக பேசி வருகிறார் ரஜினிகாந்த்.
திருமணம் எப்படி இருக்கும்?: ப்ரீ வெட்டிங் விழாவையே இவ்வளவு பிரம்மாண்டமாக மார்க் ஸூக்கர்பெர்க், பில் கேட்ஸ், ரிஹானா, ரஜினிகாந்த், ஷாருக்கான் என அழைத்து நடத்தி வரும் முகேஷ் அம்பானி திருமண விழாவுக்கு ஒட்டுமொத்த ஹாலிவுட் நடிகர்களையும் இறக்கிவிடுவார் என்றே தெரிகிறது.

வேட்டையன் சூட்டிங்கிற்கு விடுமுறை: லால் சலாம் தோல்விக்கு பிறகு வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வந்த ரஜினிகாந்த் தற்போது தனது நண்பர் அம்பானியின் அழைப்பை ஏற்று அவரது மகனின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் படத்தின் சூட்டிங்கிற்கு ரஜினிகாந்த் பிரேக் விட்டுள்ளார். மற்ற நடிகர்களை வைத்து படத்தின் சூட்டிங் நடைபெற்று வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
வெடித்த சர்ச்சை: நடிகர் ரஜினிகாந்த் ஒரு புகைப்படத்துக்கு கூட தனது பணிப்பெண்ணை அருகே நிற்க விடாமல் விரட்டி விட்டதாக ரஜினிகாந்தின் ஹேட்டர்கள் வீடியோவை வைரலாக்கி கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர். அதன் மூலம் சோஷியல் மீடியாவில் தேவையற்ற சண்டைகளும் தற்போது கிளம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











