Excellent movie.. மகான் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்.. கார்த்திக் சுப்புராஜ் மகிழ்ச்சி!
சென்னை: சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் ஒடிடியில் நேரடியாக வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகான் படத்தை பார்த்து விட்டு வெகுவாக பாராட்டியுள்ளார்.
தற்போது, அந்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து தனது மகிழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஷேர் செய்துள்ளார்.

மிரட்டும் மகான்
அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியான சியான் விக்ரமின் மகான் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் கேங்ஸ்டர் படங்களை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ், இந்த முறையும் அதே பாணியை கையில் எடுத்து நேர்த்தியான அவுட்புட்டை கொடுத்துள்ள நிலையில், பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.

சியான் விக்ரம்
தொடர்ந்து பல படங்கள் சறுக்கிய நிலையில், மகான் திரைப்படத்திற்காக கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ள விக்ரமுக்கு இப்படி ஏகப்பட்ட இடங்களில் இருந்து படம் நல்லா இருக்கு என குவியும் பாராட்டுக்கள் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. மகான் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன், கோப்ரா, பா. ரஞ்சித் படம் என தொடர்ந்து விக்ரம் மிரட்ட காத்திருக்கிறார்.

யங் வெர்ஷன்
அப்படியே விக்ரமின் யங் வெர்ஷனாக மாறி திரையில் ஒவ்வொரு காட்சியிலும் தெறிக்கவிட்டு வருகிறார் துருவ் விக்ரம். தந்தை ஆறடி பாய்ந்தால் மகன் 60 அடி பாய்வார் என்பது அவர் மெனக்கெடுவதிலேயே தெரிகிறது. விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவருக்கும் ஒரு ஹிட் படமாகவே மகான் அமைந்துள்ளது.

ரஜினிகாந்த் பாராட்டு
ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் மகான் படத்தை பாராட்டி வரும் நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்த நடிகர் ரஜினிகாந்த் "Excellent movie... Superb Performances.... Brilliant " என போன் செய்து பாராட்டியதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

கம்பேக்
மாநாடு படம் மூலம் சிம்பு கம்பேக் கொடுத்த நிலையில், மகான் படம் மூலம் கார்த்திக் சுப்புராஜ் சரியான கம்பேக் கொடுத்துள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர். ஜகமே தந்திரம் படம் சொதப்பிய நிலையில், மகான் படத்தின் மூலம் அதனை சரி செய்து விட்டார் கார்த்திக் சுப்புராஜ் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தலைவர் 169க்கு வெயிட்டிங்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 169 படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர் என்றும் பேட்ட படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











