Rajini on Maamannan - சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு.. மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி

சென்னை: Rajini Praises Maamannan (மாமன்னனை பாராட்டிய ரஜினி) சமத்துவத்தை வலியுறுத்தும் அருமையான படைப்பு மாமன்னன் படத்தை ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் வடிவெலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படமானது கடந்த ஜூன் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகராக உதயநிதி ஸ்டாலினுக்கு மாமன்னன் தான் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth Praises Maamannan Movie And Mari Selvaraj

சூப்பர் ரெஸ்பான்ஸ்: தான் இயக்கிய முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களின் மூலம் வெகுவாக கவனம் ஈர்த்த இயக்குநர் முதல்முறையாக புதிய கூட்டணியுடன் களமிறங்கியதால் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு நிலவியது. இதன் காரணமாக முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் திரையரங்குக்கு சென்று படத்தை பாத்து சூப்பர் ரெஸ்பான்ஸை கொடுத்துவருகின்றனர்.

வசூலிலும் மாஸ்: விமர்சன ரீதியாக படம் நல்ல வரவேற்பைப் பெற்ற சூழலில் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படும் மாமன்னன் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களின் முடிவில் 33 கோடி ரூபாய்வரை வசூலித்துவிட்டதாகவும் போட்ட பட்ஜெட்டை ஒரு வாரத்துக்குள்ளாகவே எடுத்துவிட்டது என்றும் கூறப்படுகிறது. இதனால் படக்குழு ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறது.

குவியும் பாராட்டு: பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை எப்படி பாராட்டினரோ அதேபோல் மாமன்னனுக்கும் பாராட்டு தெரிவிக்கின்றனர். ஏனெனில் இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் பேசாத அரசியலை மாமன்னனில் மாரி செல்வராஜ் பேசியிருக்கிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

ரஜினியின் பாராட்டு: படம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் மாரி செல்வராஜை நேரில் வரவழைத்தும் வாழ்த்தினார். அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்: ரஜினிகாந்த்தின் பாராட்டைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்திருக்கும் மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில், "என் முதல் இரண்டு படங்களான பரியேறும் பெருமாளையும் கர்ணனையும் பார்த்து பாராட்டியதை போல என் மூன்றாவது படமான மாமன்னனையும் விருப்பத்தோடு பார்த்து பேரன்போடும் பெரும் ப்ரியத்தோடும் நேரில் அழைத்து மனதார பாராட்டிய நமது சூப்பர்ஸடார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு என் இதயத்திலிருந்து நிரம்பி வழியும் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X