பிரபு தேவா பின்னிட்டார்.. சூப்பர் சூப்பர்! - மெர்க்குரிக்கு ரஜினி வாழ்த்து மழை
சென்னை: மெர்க்குரி படத்தில் பிரபு தேவா நடிப்பில் பின்னி எடுத்துவிட்டார்.
பிரில்லியன்ட் படம் என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவின் 50 நாட்கள் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு வெளியான முதல் படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை ஒரு மௌன த்ரில்லராகத் தந்திருந்தார்.
பிரபுதேவா, இந்துஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சில குறைகள் சொல்லப்பட்டாலும், உருவாக்கத்துக்காக இந்தப் படத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்தப் படத்தை தன் வீட்டுத் திரையரங்கில் பார்த்த ரஜினிகாந்த், உடனே படக்குழுவினரை தனது வீட்டுக்கு அழைத்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜிடம், "இந்தப் படத்தின் நோக்கம் அருமை. பிரமாதமாக எடுத்திருக்கிறீர்கள். பிரில்லியன்ட் ஒர்க். பிரபு தேவா பின்னி எடுத்திட்டார். சூப்பர் சூப்பர்...," என்றார் ரஜினிகாந்த்.
பின்னர் படத்தில் நடித்த ஹீரோயின் இந்துஜா மற்றும் புதுமுகங்களிடம் பேசி, அவர்களையும் வாழ்த்தினார்.
ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications