Rajinikanth: துரந்தர் 2 ஒவ்வொரு இந்தியனும் பார்க்கனும்.. பாராட்டித் தள்ளிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சென்னை: இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான படம் துர்ந்தர் 2. கடந்த 19ஆம் தேதி வெளியான இந்த படத்தை பிரபலங்கள்பலரும் பாராட்டினர். அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் சரத்குமார் மற்றும் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் படத்தை பாராட்டினர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பாராட்டி தந்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth Praises Ranveer Singh s Dhurandhar 2 Calls It a Must-Watch for Every India
Photo Credit:

அவரது எக்ஸ் பதிவில், “ யெப்பா.. என்னா மாதிரியான படம்.. ஆதித்ய தார் உங்களுக்கு சல்யூட். பாக்ஸ் ஆபீஸின் மாஸ்டர். ரன்வீர் சிங் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் துரந்தர் 2. ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் துரந்தர் 2 படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆத்தியுள்ளது.

பாராட்டு: துரந்தர் 2 படம் மார்ச் 23ஆம் தேதி வரை உலக அளவில் ரூபாய் 752 கோடிகள் வசூலித்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் கூறுகின்றன. இது மட்டுமல்லாமல் படம் மொத்தம் நான்கு மணி நேரம் ஓடுவதால் படத்தை அதற்கு ஏற்ற வகையில் விறுவிறுப்பாக இயக்கி உள்ளார் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டினர். அதேபோல் நடிகர் ரன்வீர் சிங்கின் நடிப்பும் படத்தில் வைக்கப்பட்டுள்ள பல டிவிஸ்ட்களும் மிகவும் சிறப்பாக படம் முழுக்க ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்றும் பலரும் பாராடுகிறார்கள்.

உண்மைக்கு மாறன: அதேநேரத்தில் உண்மைச் சம்வத்தை மையமாக கொண்ட இந்த படத்தில், அந்த உண்மைச் சம்பவ காலகட்டத்தில் பிரதமராகவே தேர்வு செய்யப்படாத நரேந்திர மோடிக்கு தேவையில்லாத எலிவேஷன் காட்சிகள் எல்லாம் வைக்கப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பிழப்பு போன்ற தோல்விகரமான மக்களை வரிசையில் நிற்கவைத்து உயிர்களைப் பறித்த திட்டத்திற்கு யாருமே எதிர்பார்க்காத முட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார்கள் என்றும் பலர் விமர்சித்தனர்.

Rajinikanth Praises Ranveer Singh s Dhurandhar 2 Calls It a Must-Watch for Every India
Photo Credit:

சூப்பர் ஸ்டார்: இப்படி இருக்கையில் தமிழ் திரையுலகில் இருந்து, ஏற்கனவே நடிகர் சரத்குமார் பாராட்டினார். சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அதேபோல், இயக்குநர் ஷங்கரும் படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பெரிய பதிவு ஒன்றையே பதிவிட்டிருந்தார். இந்நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், “ யெப்பா.. என்னா மாதிரியான படம்.. ஆதித்ய தார் உங்களுக்கு சல்யூட். பாக்ஸ் ஆபீஸின் மாஸ்டர். ரன்வீர் சிங் உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் துரந்தர் 2. ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டு பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X