யோகம் உள்ள யோகி பாபு.... அடுத்தடுத்து குவியும் பட வாய்ப்புகள்

Recommended Video

Gurkha Movie Press Meet: Yogi Babu: சத்யம் தியேட்டர் வாசலில் இருந்த யோகி இப்போ ஹீரோ- வீடியோ

சென்னை: தர்மபிரபு படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதை மிகப் பெரிய பரிசாக நினைத்து யோகி பாபு, தனது சினிமா ஓட்டத்தை மேலும் அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலம் தொட்டே, காமெடி நடிகர்களின் ஆதிக்கமும் சேர்ந்தே வருகிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் காமெடி இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்தக் காலத்தில் காளி.என்.ரத்தினம், டி.ஆர்.ராமச்சந்திரன், வி,கே,ராமசாமி தொடங்கி, இப்போது களத்தில் நம்பர் 1ஆக உள்ள யோகி பாபு வரையில் அனைவருமே தங்களின் காமெடி மூலம் சுமாரான படங்களைக்கூட வெற்றிபெற வைத்துள்ளனர்.

Rajinikanth praises Yogi Babu

ஆனால் அதே சமயத்தில் இவர்களில் வெகு சிலரே அழகானவர்களாக இருந்தனர். மற்றவர்கள் எல்லாம் தங்களின் நகைச்சுவைத் திறமையைக் கொண்டு முதல் இடத்திற்கு முன்னேரியவர்கள் தான். இதற்காக இவர்களெல்லாம் என்றைக்கும் வருத்தப்பட்டது கிடையாது. அந்த வகையில் யோகி பாபுவும் தன்னுடைய டைமிங்கான வசனத்தின் மூலம் இன்றைக்கு முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

கடந்த 2015ஆம் ஆண்டில் வெளிவந்த காக்கா முட்டை படத்தில் நடிகர் ரமேஷ் திலக்கிற்கு அடிப்பொடியாக நடித்தவர் தான் யோகி பாபு. இன்றைக்கு காலச்சக்கரம் அப்படியே தலைகீழாக மாறியதால், சமீபத்தில் வெளியான தர்ம பிரபு படத்தில் யோகி பாபு நாயகனாகவும் அதே ரமேஷ் திலக் இவருக்கு உதவியாளராகவும் மாறியது.

இந்த மாற்றம் நிகழும் என்று ரமேஷ் திலக் நினைத்திருக்க மாட்டார். ஆனால் யோகி பாபு நினைத்திருப்பார். நமக்கான காலம் நிச்சயம் வரும் என்று. அந்த காலம் இப்போது வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நம்பர் 1 காமெடியன் யோகி பாபு தான். எத்தனையோ கேலி கிண்டல்களை தாண்டி காமெடியனாக வெற்றி கோடி கட்டி கொண்டு இருக்கிறார்.

பல ஜாம்பவான் காமெடியன்கள் ஒரு புறம் அமைதி காக்கும் வேளையில் தனக்கான சரியான பாதையை அமைத்து அதை தக்கவைத்து கொண்டு வருகிறார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் யோகி பாபு என்றே சொல்லலாம்.

சமீபத்தில், யோகி பாபு நாயகனாக நடித்து வெளிவந்த தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் கொழுத்த லாபம் தந்ததாக கோலிவுட் பட்சிகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த கோமாளி படமும் இந்த வெற்றிப் பட வரிசையில் இடம் பிடித்துள்ளது.

யோகி பாபு தற்போது ரஜினிகாந்துடன் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் தர்மபிரபு படத்தை யோகி பாபு திரையிட்டுக் காட்டினாராம். படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் யோகிபாபு மற்றும் படத்தின் இயக்குனர் முத்துக்குமரன் இருவரையும் பாராட்டினாராம். அரசியல் நையாண்டி, கேலி, கிண்டல் என பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுவாரசியமான படத்தைக் கொடுத்துள்ளீர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் போன்ற ஸ்டார் வேல்யூ நடிகர்கள் பாராட்டியது மிகவும் தெம்பளிப்பதாகவும் இன்னும் தனது ஓட்டத்தை வேக படுத்தும் முயற்சியில் இருப்பதாக தெரிவித்து உள்ளார். யோகம் உள்ள யோகி பாபு - தனது விடா முயற்ச்சியில் வெற்றி பெறட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X