சந்திரமுகி படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த ஜோதிகா.. வேட்டையன் செய்த சேட்டை.. ரேர் வீடியோ!
சென்னை: Chandramukhi (சந்திரமுகி) - பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா சரத்குமார், வடிவேலு, லட்சுமி மேனன், மகிமா நம்பியார், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த வாரம் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சந்திரமுகி 2 படத்தை பார்த்த அனைவருக்குமே ரஜினிகாந்த், ஜோதிகா மற்றும் நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தைப் போல இந்த படம் இல்லையே என்கிற வருத்தம் எழத்தான் செய்கிறது.

இந்நிலையில், சந்திரமுகி படத்தின் சூட்டிங் போது நடிகை ஜோதிகாவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படி பிராங்க் செய்தார் என்கிற அரிதான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
சந்திரமுகி டெலிடட் சீன்ஸ்: சந்திரமுகி 2 திரைப்படம் வெளியான நிலையில், சந்திரமுகி முதல் பாகத்திலேயே அந்த படம் ஒரு பேய் படம் என்பதற்கான விஷயங்களை வைத்திருந்த காட்சிகளை இயக்குனர் பி வாசு கடைசி நேரத்தில் டெலிட் செய்துவிட்டார் என டெலிட் ஆன காட்சிகளை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில், சந்திரமுகி படத்தின் சூட்டிங் ஸ்பாட் காட்சி ஒன்றும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த ஜோதிகா: மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஏற்கனவே வெளியான படத்தை தான் தமிழில் சந்திரமுகி என ரீமேக் செய்து வாசு இயக்கியிருந்தார். அந்த படத்தின் சூட்டிங் போது நடிகர் ரஜினிகாந்த் ஒரு பேப்பரைக் கொடுத்து இந்த படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்களை எழுத வேண்டும் என கொடுத்திருக்கிறார். செட்டில் உள்ள அனைவரும் எழுதி உள்ளனர், நீங்களும் இது கட்டாயமா எழுதணும் எனக்கூற, ரஜினி சொல்லிட்டாரே சரியா இருக்கணும் என ஒட்டுமொத்த நெகட்டிவ் பாயிண்ட்டுகளையும் எழுதி கொடுத்திட்டேன் என்று ஜோதிகாவே அந்த நிகழ்வு குறித்து காபி வித் டிடி பேட்டியில் கூறியிருந்தார். அதன் ஒரிஜினல் வீடியோ தான் தற்போது டிரெண்டாகி வருகிறது.
பிராங்க் பண்ண ரஜினிகாந்த்: சமீப காலமாகத்தான் யூடியூபில் வெளியாகும் பிராங்க் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு பிராங்க் பரீட்சையமாகியிருக்கும். ஆனால், அப்போதே சூப்பர்ஸ்டார் அதனை செய்துள்ளார். ஜோதிகாவின் விமர்சனத்தை பி. வாசுவிடம் கொடுத்து எவ்ளோ நெகட்டிவ் எழுதியிருக்காங்க பாருங்க என சொல்ல, செட்டில் வேற யாருமே அதை செய்யவில்லை என்றும் ரஜினி தன்னை பிராங்க் செய்தார் என்பதை அறிந்து சிரித்து விட்டார் ஜோதிகா. பி. வாசு ஜோதிகாவை பார்த்த பார்வையைத்தான் சந்திரமுகியாக மாறி ஜோதிகா பார்த்தாரா என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











