அண்ணாத்த வதந்திக்கு அழகா முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்.. இன்னும் 40 சதவீதம் தானாம் பாக்கி!

சென்னை: அரசியல் அறிவிப்புடன் சேர்த்து அண்ணாத்த படத்தின் அப்டேட்டையும் ரஜினிகாந்தே அறிவித்து விட்டார்.

உடல் நலக் குறைவு காரணமாக அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தாமதமாகும் என்றும், ரஜினி ஷூட்டிங்கை தொடர மாட்டார் என்றும் வதந்திகள் பரவின.

அதற்கும் சேர்த்து, அந்த படத்தை முடித்துக் கொடுத்தே தீருவேன் என ரஜினிகாந்த் பேசியது ரசிகர்களை ரொம்பவே சந்தோஷப்படுத்தி உள்ளது.

ரஜினியின் அண்ணாத்த

ரஜினியின் அண்ணாத்த

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போயுள்ளது. பொங்கலுக்கு அண்ணாத்த ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும், பல மாதங்கள் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என தெரிகிறது.

4 நாயகிகள்

4 நாயகிகள்

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தையாகவும், முத்து படத்தில் ஜோடியாகவும் நடித்த மீனா. அண்ணாமலை, மன்னன் படங்களில் ஜோடியாக நடித்த குஷ்பு. சந்திரமுகி, குசேலன், தர்பார் படங்களில் ஜோடியாக நடித்த நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் என 4 நாயகிகள் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

ரஜினிக்கு பதில் அஜித்

ரஜினிக்கு பதில் அஜித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல் நலன் சரியில்லை என்ற தகவல்கள் வெளியானதும், சன் பிக்சர்ஸ் மற்றும் சிறுத்தை சிவா அண்ணாத்த படத்தில் அஜித்தை நடிக்க வைக்கப் போவதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின.

அழகா முற்றுப்புள்ளி

அழகா முற்றுப்புள்ளி

முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் எனும் கொள்கையில் உறுதியாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை போல அரசியலுக்கு நுழைவது உறுதி என தெரிவித்த அதே சமயம், அண்ணாத்த படத்தை முடித்துக் கொடுக்கும் கடமையும் தனக்கு இருப்பதாக கூறி அந்த வதந்திக்கு அழகா முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

40 சதவீதம் தான்

40 சதவீதம் தான்

மேலும், அரசியல் அறிவிப்புடன் அண்ணாத்த படத்தின் அசத்தல் அப்டேட்டையும் மறக்காமல் ரஜினி கூறி உள்ளார். இன்னும் 40 சதவீதம் ஷூட்டிங் தான் மீதம் உள்ளது என்றும், வெகு விரைவாக அதனை முடித்துக் கொடுத்து விட்டு, முழு வீச்சில் அரசியல் களத்தில் இறங்கப்போவதாகவும், அதனால், தனது உயிருக்கு ஒன்று நேர்ந்தாலும் கவலையில்லை என சொல்லி ரசிகர்களை கலங்கடித்துள்ளார்.

ரிலீஸ் எப்போ?

ரிலீஸ் எப்போ?

இந்த வருஷம் ஆயுத பூஜைக்கே அண்ணாத்த படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் படம் ரிலீசாக வாய்ப்பில்லை. கண்டிப்பாக அடுத்த ஆண்டு சம்மரில் அண்ணாத்த படம் ரிலீசாகும் என்று தெரிகிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் ரஜினிக்காக பாடியுள்ள அந்த ஓப்பனிங் பாடல் வெகு சீக்கிரமே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X