“பீஸ்ட்“ படம் பார்த்த ரஜினி.. நோ ரியாக்ஷன்.. என்ன பயமா இருக்கா ?

சென்னை : இயக்குநர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சன் டிவி அலுவலகத்தில் தனியாக போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

ரஜினியின் 169வது படத்தை இயக்குர் நெல்சன் இயக்க உள்ளார். இப்படம் தற்காலிகமாக தலைவர் 169என அழைக்கப்பட்டு வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகன் ரஜினிக்கு மகளாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பீஸ்ட்

பீஸ்ட்

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்தில் வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் இந்திய 'ரா' பிரிவு அதிகாரியாக நடிகர் விஜய் நடித்துள்ளார். தீவிரவாதிகள் ஒரு மாலுக்குள் புகுந்து அங்கிருக்கும் பொதுமக்களை பிணைக்கைதியாக பிடித்துவைத்துக்கொண்டு, சிறையில் இருக்கும் பயங்கர தீவிரவாதியை விடுவிக்குமாறு மிரட்டுகின்றனர். இந்த மாலுக்குள் இருக்கும் விஜய் அங்கிருக்கும் பொதுமக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

காமெடி எடுபடவில்லை

காமெடி எடுபடவில்லை

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்கு காரணமே அப்படத்தில் இருந்த தாறுமாறான நகைச்சுவைதான். பீஸ்ட் படத்தில் யோகிபாபு, விடிவிகணேஷ் என அனைத்து நடிகர்கள் இருந்த போதும் காமெடி பெரிதாக எடுபடவில்லை. பீஸ்ட் படத்தை பார்த்த தளபதியின் ரசிகர்கள் அழாத குறையாக என்ன நெல்சன் இப்படி பண்ணிடீங்க என்று கேட்டுவருகின்றனர்.

பயத்தில் ரஜினி ரசிகர்கள்

பயத்தில் ரஜினி ரசிகர்கள்

சோஷியல் மீடியாவில் பீஸ்ட் படம் குறித்த மீம்ஸ்களை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர். மேலும், அடுத்த தலைவர் 169 திரைப்படத்தை இயக்கப்போவதால், சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களும் பயத்தில் உள்ளனர். இதனால், அடுத்த படத்தையாவது ஒழுங்கா எடுங்க என்று நேரடியாகவே அவருக்கு பதிவை டேக்செய்து வருகின்றர்.

பயமா இருக்கா

பயமா இருக்கா

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சன் டிவி அலுவலகத்துக்கு வரச் சொல்லி பீஸ்ட் படத்தை தனியாக போட்டுக் காட்டினார்களாம். படத்தை பார்த்தவர் ரஜினிகாந்த், அமைதியாக சிரித்துவிட்டு, மௌனமாக எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியானதை அடுத்து பலரும் பீஸ்ட் படத்தில் என்ன பயமா இருக்கா என்ற டையலாக்கை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X