»   »  'எகனாமிக் கிளாஸ்'ல வரட்டா? என்று கேட்டாராம் ரஜினி.. அப்படியே நெகிழ்ந்து விட்டாராம் விஷால்!

'எகனாமிக் கிளாஸ்'ல வரட்டா? என்று கேட்டாராம் ரஜினி.. அப்படியே நெகிழ்ந்து விட்டாராம் விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியை பிஸ்னஸ் கிளாசில் அடம்பித்து அனுப்பிய விஷால்..!!

ரஜினியின் எளிமையை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நரைத்த தலையோ, வழுக்கையோ எதை பற்றியும் கவலைப்படாமல் முகத்துக்கு ஒரு பவுடர் கூட போடாமல் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் ஒரே நடிகர் அவர் மட்டும்தான். அதனால்தான் அவரது அரசியல் வருகை இத்தனை பரபரப்பாகி உலக ட்ரெண்ட் ஆகிறது.

சமீபத்தில் மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர விழா நடந்தது. மொத்தம் 300க்கு மேற்பட்ட நடிகர்கள் நடிகைகள் சென்னையில் இருந்து சென்றாக வேண்டும். ஒரு விமானத்தில் அதிகபட்சம் 12 சீட்கள்தான் பிசினஸ் கிளாஸில் இருக்கும். எனவே ரஜினி, கமல் இருவருக்கு மட்டும்தான் பிசினஸ் கிளாஸ். எழுபது வயதைத் தாண்டியவர்களுக்கு பிசினஸ் கிளாஸ். அதிலும் பெண்களுக்கே முன்னுரிமை. இப்படித்தான் வரிசைப்படுத்தப்பட்டது.

 Rajinikanth ready to travel in economy class

விஷால், ஆர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் ஏன் கோவை சரளா, மனோபாலா கூட எகானமிக் கிளாஸில்தான் பயணம் செய்தனர். எஸ்வி சேகர் தனக்கு பிசினஸ் க்ளாஸ்தான் வேண்டும் என்று கேட்டு பிரச்சினை செய்ததாக சொல்கிறார்கள். இந்த தகவல் ரஜினிக்கு சென்றிருக்கிறது. "அய்யோ.. அவர் நடிகர் சங்கத்தை விமர்சிக்கிறவர். அவர் வேணும்னா பிசினஸ் கிளாஸ்ல வரட்டும். நான் எகானமிக் கிளாஸ்ல வர்றேன்," என்று ரஜினி சொல்ல விஷால் நெகிழ்ந்ததோடு பதறியும் விட்டாராம்.

ரஜினியை வலுக்கட்டாயமாகத்தான் பிசினஸ் கிளாஸில் அனுப்பியிருக்கிறார்கள். பிசினஸ் கிளாஸில் ரஜினியும் லதாவும் அமர்ந்திருக்க பின்னால் எகானமி கிளாஸில் இருந்த இளம் நடிகர்கள் ஆட்டம் பாட்டம் போட்டு வந்தனர். ரஜினி கண்டுகொள்ளாமல் ஜன்னல்பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாராம்!

English summary
Superstar Rajini was even ready to travel in economy class in flight for Malaysian function due to budget.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X