Rajini: வாழ்நாள் சாதனையாளர் விருது.. மொத்த குடும்பத்துடன் கெத்தாக சென்று வாங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினி!
கோவா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1975ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தனது மொத்த குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
கோவாவின் பனாஜி நகரில் நடைபெற்று வரும் 56 வது சர்வதேச திரைப்பட விழா (IFFI 2025), இன்று நவம்பர் 28 அன்று பிரம்மாண்டமான நிறைவு விழாவுடன் முடிவுக்கு வருகிறது. 81 நாடுகளிலிருந்து 240 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடும் இந்த விழாவில் இறுதியாக, தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 50 ஆண்டுகள் நீடித்த சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதை பெற்றார். 1975ல் 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஜினி, ஐந்து தசாப்தங்களாக மக்களின் இதயங்களை வென்று, உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் அடையாளமாகவும் உள்ளார். இந்த விழாவில், சூப்பர் ஸ்டார் மகள்கள், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இரண்டு மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா, சௌந்தர்யாவின் கணவர் மற்றும் மகன் என மொத்த குடும்பமும் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு விருது விழாவில் பங்கேற்க, நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருடன் சிறப்பு விமானத்தில் கோவாவிற்கு புறப்பட்டார். அதே விமானத்தில், தனது திரைப்படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற நடிகை நயன்தாரா உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொள்ள சென்றனர். இந்த விழா, நவம்பர் 20 அன்று கர்னிவல் போன்ற பிரமாண்ட பேரணியுடன் தொடங்கி, ஜப்பான் சினிமாவை மையமாக கொண்டு உலகளாவிய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.
உலகின் சிறந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்படும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) வில், லைகா புரொடக்ஷன் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய "லால் சலாம்" திரைப்படம் சிறப்புத் திரையிடலுக்காக தேர்வு செய்யப்பட்டு பெருமையுடன் திரையிடப்பட்டது.

இந்த சிறப்பு திரையிடல் மற்றும் விருது வழங்கும் நிகழ்வில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,லைகா புரொடக்ஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி திரு GKM தமிழ்க்குமரன்,இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்,உட்பட பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். லைகா புரொடக்ஷன்ஸின் படைப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச மேடைகளில் கவனம் பெறுவது பெருமைக்குரிய சாதனையாகும். மேலும், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள லைகா புரொடக்ஷன்ஸின் 'லாக்டவுன்' திரைப்படமும் இரண்டு நாட்களுக்கு முன்பு IFFI மேடையில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











