அமெரிக்காவிலும் பாட்ஷா தான்.. கால்மேல கால் போட்டு கெத்தா போஸ் கொடுத்த ரஜினி.. வைரலாகும் போட்டோ!

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர் ஒருவர் சந்தித்த புகைப்படம் பாட்ஷா படத்தை நினைவுப் படுத்தும் விதமாக வைரலாகி வருகிறது.

கால் மேல கால் போட்டு கெத்தா ஸ்டைலா ரஜினிகாந்த் உட்கார்ந்திருக்க அருகே செல்லப்பிராணியான நாய் இருப்பது பாட்ஷா படத்தை நினைவுப்படுத்துகிறது.

அமெரிக்காவில் சிகிச்சை

அமெரிக்காவில் சிகிச்சை

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொடுத்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக தனி விமானம் மூலம் பறந்து சென்றார். அங்குள்ள மயோ கிளினிக்கில் ரஜினிகாந்துக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.

ரொம்ப நல்லாருக்காரு

ரொம்ப நல்லாருக்காரு

நடிகர் ரஜினிகாந்த் திடீரென அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றதை அறிந்து ரசிகர்கள் கவலைப்பட்ட நிலையில், மயோ கிளினிக்கில் இருந்து முழு ஆரோக்கியத்துடன் கம்பீரமாக தனது மகளுடன் நடந்து வரும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை நிம்மதி அடைய வைத்தது.

நாடு திரும்புகிறார்

நாடு திரும்புகிறார்

நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் சென்னைக்கு வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் ரசிகருடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ரசிகருடன் புகைப்படம்

ரசிகருடன் புகைப்படம்

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார் ரஜினிகாந்த் என்கிற தகவல் தெரிந்ததும் ஏகப்பட்ட அமெரிக்க ரசிகர்கள் அவரை காண முயற்சித்து வருகின்றனர். சில ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இணையத்தில் தீயாக அந்த புகைப்படங்கள் வைரலாகின.

பாட்ஷா பாய்

பாட்ஷா பாய்

இந்நிலையில், தற்போது ரசிகர் ஒருவருடன் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் புதிய புகைப்படம் ரசிகர்களுக்கு மீண்டும் பாட்ஷா படத்தை நினைவுப்படுத்தி வருகிறது. சோபாவில் கால் மேல கால் போட்டு கெத்தாக நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருக்க ரசிகர் எதிரில் அமர்ந்து ரஜினியுடன் பேசுகிறார். சூப்பர்ஸ்டார் அருகே செல்லப்பிராணி நாய் ஒன்று இருக்க அப்படியே மீண்டும் பாட்ஷா படத்தை ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் நினைவூட்டி வருகிறது.

Recommended Video

Rajinikanth சென்னை திரும்புவதில் தாமதம் | Aishwarya Dhanush, Thalaivar 170
தீபாவளிக்கு சரவெடி

தீபாவளிக்கு சரவெடி

இயக்குநர் சிவா கடைசியாக இயக்கிய விஸ்வாசம் படத்தில் தல அஜித், நயன்தாரா நடித்திருந்தனர். படம் வேற லெவல் ஹிட் அடித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம் ரிலீசாக உள்ளது. நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியானால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய சரவெடி காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X