ரஜினிகாந்தின் புதிய கூலிங் கிளாஸை கவனிச்சீங்களா? திடீரென கண்ணாடியை மாற்ற என்ன காரணம் தெரியுமா?
சென்னை: அரசியல் தலைவர்கள் சந்திப்பு மற்றும் சினிமா படப்பிடிப்பில் பிசி என நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
டெல்லி பயணம், ஆளுநர் உடனான சந்திப்பு, விலை உயர்வு பற்றிய கேள்விகளை புறக்கணித்தது என சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
இதற்கிடையே அவரது கூலிங் கிளாஸ் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது. திடீரென ரஜினிகாந்த் இந்த கூலர் கண்ணாடியுடன் வலம் வர என்ன காணம் என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

பரபரப்பை பற்ற வைத்த பரட்டை
சினிமா என்றாலும் சரி, அரசியல் என்றாலும் சரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை விட்டு வெளியே வந்தாலே அது இந்திய சினிமாவிலும் மிகப்பெரிய செய்தியாக டிரெண்டாகி விடும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதிலும், இந்த முறை டெல்லி பயணம், ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பேசி, அவருக்கு சால்வை அணிவித்தது என பெரிய பரபரப்பையே பற்ற வைத்திருக்கிறார்.

ஜெயிலர் கவுன்டவுன் ஸ்டார்ட்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகி நீண்ட மாதங்கள் ஆன நிலையில், அதன் படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் ஆகப் போகிறது என்கிற கேள்வியை ரஜினியிடம் முன் வைக்க, நெக்ஸ்ட் ஷூட்டிங் தான் கண்ணா என சொல்லி விட்டார் சூப்பர்ஸ்டார்.

நோ கமெண்ட்ஸ்
போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் இன்று பேசியது அரசியல் வட்டாரத்தில் ஏகப்பட்ட அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. அரசியலுக்கு வரப் போவதில்லை என்றும் மக்கள் பிரச்சனை குறித்த கேள்விகளுக்கு நோ கமெண்ட்ஸ் என ரஜினி பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கூலிங் கிளாஸை கவனிச்சீங்களா
இந்நிலையில், இதையெல்லாம் ஓவர்டேக் செய்யும் விதமாக ரஜினி வீட்டில் இருந்து வெளியே வருவதற்கே அணிந்து வந்த அந்த கூலிங் கிளாஸ் தான் தற்போது ஹாட் டாப்பிக்காக அமைந்திருக்கிறது. திடீரென இப்படி கூலர் கண்ணாடியுடன் ரஜினி வருவதற்கான முக்கியமான காரணம் பற்றிய தகவலும் வெளியாகி உள்ளன.
Recommended Video

கண் அலர்ஜி
நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் கண் அலர்ஜி காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சையை சமீபத்தில் மேற்கொண்ட நிலையில், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இப்படி கூலிங் கிளாஸ் கண்ணாடியுடன் வெளியே வருகிறார் எனக் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











