Rajini - கழுகு கீழே வந்தா பிராணிகளுக்குத்தான் ஆபத்து.. களத்தில் குதித்த ரஜினியின் உறவினர்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) கழுகு பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும் என்று ரத்னகுமார் பேசியதற்கு ரஜினி உறவினர் மதுவந்தி பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஓடியது. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் சொல்ல இல்லை ரஜினிதான் ஒரே சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் கூறினர். சூழல் இப்படி இருக்க ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச்சில் பேசியிருந்த ரஜினிகாந்த் காக்கா - கழுகு கதையை கூறினார். அந்தக் கதையை கேட்ட பலரும் ரஜினிகாந்த் தன்னை கழுகு என்றும் விஜய்யை காக்கா என்றும் சொல்கிறார் என்று ஓபனாக பேச ஆரம்பித்தனர்.

விஜய் குட்டி ஸ்டோரி: ஜெயிலர் படம் வெளியாகி ஹிட்டடித்தது. அதனையடுத்து லியோ படமும் வெளியாகி வசூல் ரீதியாக ஹிட்டடித்தது. இதனையடுத்து லியோ சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. அப்போது பேசிய விஜய் ஒரு குட்டி ஸ்டோரியை சொனனர். அதனைத் தொடர்ந்து மக்கள் திலகம் என்றால் ஒருவர்தான். நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருவர்தான். உலக நாயகன் என்றால் ஒருவர்தான். சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான். தல என்றால் ஒருவர்தான் என பேசினார்.
அப்பா - மகன் உறவு: இதனை கேட்ட ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று பேசினர். தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், அப்பாவின் சட்டையோ வாட்ச்சோ பெரிதாக இருந்தாலும் மகன் அதை போட்டுக்கொள்ள ஆசைப்படுவதில் எந்த தவறும் இல்லையே என்று கூறி ரஜினியை தான் எவ்வாறு நினைக்கிறேன் என்பதையும் மறைமுகமாக உணர்த்தினார்.
ரத்னகுமார் பேச்சு: இப்படி விஜய் தன்னுடைய பேச்சில் சுமூக நிலையை கொண்டு வந்தார். ஆனால் இயக்குநர் ரத்னகுமாரோ அந்த விழாவில் பருந்து எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆக வேண்டும் என்று பேசினார். அவரது இந்த பேச்சு ரஜினியை தாக்குவது போல் இருப்பதாக பலராலும் கருதப்பட்டது. மேலும் இதெல்லாம் தேவையில்லாத பேச்சு என்றும் ஒரு கருத்து எழுந்திருக்கிறது.
மதுவந்தி பதிலடி: இந்நிலையில் ரஜினியின் உறவினரும் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளுமான மதுவந்தி ரத்னகுமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் பேசுகையில், “கழுகு மேலே பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதானே ஆக வேண்டும் என்று ஒருவர் பேசுகிறார். அந்தத் தம்பிக்கு தெரியவில்லை போல. அதாவது கழுகு கீழே வந்தால் தாக்கிவிட்டு தனக்கு தேவையானதை எடுத்துவிட்டு அனைத்தையும் கலைத்துப்போட்டுவிட்டு போயிடும்.
கழுகு கீழே வந்தால் கீழே இருக்கும் பிராணிகளுக்குத்தான் ஆபத்து. கழுகுக்கு என்றைக்குமே ஆபத்து இல்லை. அதனால் கழுகு எப்போதும் மேலேயே பறந்துகொண்டிருப்பதுதான் கீழே இருக்கும் பிராணிகளுக்கெல்லாம் நல்லது” என்றார்.


Click it and Unblock the Notifications











