Rajinikanth - தசாவதாரம் கமலை மிஞ்சிய யோகிபாபு - ட்ரெய்லரை வெளியிட்டார் ரஜினிகாந்த்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) வி.சி.குகநாதன் கதையில் உருவாகும் காவி ஆவி நடுவுல தேவி படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
தமிழ் சினிமாவின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர் வி.சி.குகநாதன். எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் நடித்த புதிய பூமி படத்துக்கு முதல்முறையாக திரைக்கதையையும், வசனத்தையும் எழுதினார் குகநாதன். அந்தப் படம் 1968ஆம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி புகழ்பெற்றவராக மாறினார் வி.சி.குகநாதன்.

இயக்குநர் குகநாதன்: கதை, திரைக்கதை எழுத்தாளராக மட்டுமின்றி ரஜினி, அஜித்குமார் உள்ளிட்டோரை வைத்து படங்களையும் இயக்கியிருக்கிறார் குகநாதன். ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய தனிக்காட்டு ராஜா, அஜித் நடிப்பில் அவர் இயக்கிய மைனர் மாப்பிள்ளை படம் வெளியாகி டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. மேலும், மஞ்சள் முகமே வருக, மதுரகீதம், மச்சானை பாத்தீங்களா, மாங்குடி மைனர், முயலுக்கு மூணு கால், கைநாட்டு உள்ளிட்ட படங்களையும் அவர் இயக்கியிருக்கிறார்.
மெகா ஹிட் மனிதன்: குகநாதன் கதை, வசனம் எழுதிய படங்களில் முக்கியமான படம் மனிதன். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதேபோல் ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான மின்சார கனவு படத்துக்கும் குகநாதன் கதை, வசனத்தில் பங்காற்றியிருக்கிறார். பிரபுதேவா,அரவிந்த் சாமி, கஜோல் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

காவி ஆவி நடுவுல தேவி: இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு வி.சி.குகநாதன் மீண்டும் கதை எழுதியிருக்கிறார். அந்தக் கதையை புகழ்மணி இயக்குகிறார். படத்துக்கு காவி ஆவி நடுவுல தேவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.
11 கெட்டப்புகளில் யோகி பாபு: இப்படத்தில் யோகிபாபு முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கிறார். அதாவது காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை ரஜினிகாந்த் இன்று அவரது வீட்டில் வைத்து வெளியிட்டார்.


Click it and Unblock the Notifications











