»   »  நாகேஷ் திரையரங்கம்’ டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார்!

நாகேஷ் திரையரங்கம்’ டீசரை வெளியிட்டார் சூப்பர் ஸ்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மறைந்த நடிகர் நாகேஷ் எண்பதுகளில் தி நகரில் சொந்தமாக ஒரு தியேட்டர் கட்டினார். மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதைத் திறந்து வைத்தார். தி நகரில் தரமான தியேட்டர் என அறியப்பட்ட அந்த அரங்கம், கடைசியில் செகன்ட் ரிலீஸ் படங்களுக்கான சாதா அரங்கமாக மாறி, பின்னர் நடத்த முடியாத சூழலில் மூடப்பட்டு, திருமண மண்டபமாகிவிட்டது.

Rajinikanth releases Nagesh Thiraiyarangam teaser

அந்த தியேட்டர் இப்போது ஒரு படத்தின் தலைப்பாக மாறிவிட்டது. சினிமா அரங்கை பின்னணியாகக் கொண்ட படம் என்பதால் இந்தத் தலைப்பு.

நெடுஞ்சாலை, மாயா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த ஆரி இதில் நாயகன். இசாக் இயக்கியுள்ளார்.

Rajinikanth releases Nagesh Thiraiyarangam teaser

இப்படத்தின் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்வு ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், படக்குழுவினரும் சீனியர் நடிகை லதாவும் கலந்து கொண்டனர்.

தனக்கும் நாகேஷுக்கும் இருந்த நட்பு காரணமாகவே, அவரது பெயரில் வெளிவந்த இப்படத்தின் டீசரை வெளியிட சூப்பர் ஸ்டார் உடனே சம்மதித்ததாராம்.

English summary
Superstar Rajinikanth was released the teaser of Nagesh Thiraiyarangam.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil