Rajinikanth: விஜய்யை காக்கான்னு சொல்லல.. மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!

சென்னை: லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் காக்கா - கழுகு கதை பற்றி பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், எனக்கும் விஜய்க்கும் எந்த போட்டியும் இல்லை அப்படி எல்லாம் சொல்லாதீங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு இந்த காக்கா கழுகு கதை எல்லாம் வேண்டாம் என ரஜினிகாந்த் வெளிப்படையாக உடைத்து பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சொன்ன காக்கா - கழுகு கதை மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. தளபதி விஜய்யை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காக்கா என சொல்கிறார் என கடும் விமர்சனங்கள் கிளம்பின. விவாத பொருளாக மாறிய நிலையில், லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய்யும் காக்கா கழுகு பற்றி தனது குட்டி ஸ்டோரியில் பேசும் அளவுக்கு அந்த சர்ச்சை பெரிதாக வெடித்தது.

Rajinikanth request dont compare him and Vijay here after at Lal Salaam Audio launch

விஜய் பற்றி பேசிய ரஜினிகாந்த்: லால் சலாம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில், நடிகர் விஜய் பற்றி ரஜினிகாந்த் பேசியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நேரம் தெளிவாக சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

வருத்தமா இருக்கு: "ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் சொன்ன அந்த காக்கா கழுகு கதையை அப்படியே வேற மாதிரி.. நான் விஜய்க்கு சொன்ன மாதிரி சோசியல் மீடியால இம்பேக்ட் பண்ணாங்க.. அது நிஜமா எனக்கு வருத்தமா இருக்கு" என்றார்.

கண்ணுக்கு முன்னாடி வளர்ந்த பையன்: விஜய் என் கண்ணுக்கு முன்னாடி வளர்ந்த பையன்.. தர்மத்தின் தலைவன் படத்தின் சூட்டிங் சமயத்தில் விஜய்க்கு 13 வயசு இருக்கும்.. மாடியில நின்னுட்டு என்னை பாத்துட்டு இருக்காரு.. ஷூட் முடிந்த உடனே சந்திரசேகர் என்கிட்ட அழைத்து வந்து என்னோட பையன் சார்.. ஆக்டிங்ல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு சொன்னாரு.. நான் உடனே படிக்க சொல்லுங்க.. படிச்சிட்டு வந்து நடிக்கலாம்னு அட்வைஸ் பண்ணேன்.

விஜய்க்கும் எனக்கும் போட்டி இல்லை: அதன் பிறகு நடிகராக வந்த விஜய் ஸ்டெப் பை ஸ்டெப்பா வளர்ந்து தன்னுடைய கடினமான உழைப்பால் இந்த இடத்துக்கு வந்து நிற்கிறார். அடுத்த அரசியலுக்கு செல்ல உள்ளார். இதுல எனக்கும் விஜய்க்கும் போட்டின்னு சொல்றதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு மனசுக்கு.. விஜயை சொல்லி இருக்காரு எனக்கு நான் தான் போட்டி.. நானே சொல்லி இருக்கேன் என் படத்துக்கு நான் தான் போட்டியின்னு..

காக்கா கழுகு கதை வேண்டாம்: விஜய் எனக்கு போட்டின்னு சொன்னா எனக்கு மரியாதை இல்லை, எனக்கு கௌரவம் இல்லை. அதேபோல அவருக்கும் அது மரியாதை இல்லை. தயவுசெஞ்சு ரெண்டு பேரும் ரசிகர்களும் பண்ணாதீங்க.. காக்கா கழுகு கதை எல்லாம் வேண்டாம்.. இது என் அன்பான வேண்டுகோள் ரொம்ப நன்றி" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் அனைத்துக்கும் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X