அமெரிக்காவில் திட்டமிட்ட வேலைகள் முடிந்து சென்னை திரும்பிய ரஜினி.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!

By Vignesh Selvaraj

Recommended Video

சென்னை திரும்பிய ரஜினி-வீடியோ

சென்னை : அமெரிக்காவிற்கு மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றிருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் உதவியாளர் சஞ்சய் ஆகியோருடன் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த் அங்கு 2 வாரங்கள் ஓய்வெடுத்துவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார்.

ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக பெயர் மாற்றிய ரஜினி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்பேன் எனக் கூறியிருந்தார். மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

Rajinikanth return back to chennai

ஓய்வெடுப்பதற்காகவும், அமைதியை விரும்பியும் சமீபத்தில் இமயமலைக்குச் சென்ற ரஜினி திரும்பியபின் தனது மன்ற நிர்வாகிகளின் நியமனம் தொடர்பாக தனது மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து பணிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், தனது உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று அங்கு அமெரிக்கா மற்றும் கனடா ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ரஜினி நேற்றிரவு சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வீடு திரும்பிய ரஜினியை அவரது மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X