'அண்ணாத்த' ஹைத்ராபாத் ஷூட்டிங் ஓவர்.. சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.. ஆரத்தி எடுத்த மனைவி லதா!
சென்னை: ஹைத்ராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மார்ச் மாதம் படப்பிடிப்பு
இதேபோல் நடிகர்கள் ஜெகபதி பாபு, சதீஷ், சூரி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. முதலில் சென்னையில் படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் படக்குழு கடந்த மார்ச் மாதம் மீண்டும் ஹைத்ராபாத் சென்றது.

ஹைத்ராபாத்தில் நிறைவு
கொரோனா இரண்டாவது அலை காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ஹைத்ராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு கடந்த 10ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

சென்னை திரும்பிய ரஜினி
இதனால் நேற்றே நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புவார் என கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார். விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்ற அவரை மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து வரவேற்றார்.
ட்ரெண்டிங்
நடிகர் ரஜினிகாந்துக்கு லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் சென்னை திரும்பியதை தொடர்ந்து
#Rajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

டப்பிங் பணிகள்
இதனிடையே அண்ணாத்த படத்தின் எஞ்சிய காட்சிகள் கொல்கத்தாவில் காட்சியாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரஜினிகாந்த் தனது டப்பிங் பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











