யாருங்க கிளப்பிவிட்டது? கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் பட பூஜை... அந்த தேதியில் இல்லையாமே!

By

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்தின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா, தொடர்பான செய்திகளில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.

தர்பார் படத்தை அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினியின் 168 ஆவது படமான இதில், ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஶ்ரீமன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஐதராபாத்

ஐதராபாத்

இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி அந்தப் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பின்னர் நேற்று சென்னைத் திரும்பினார்.

ராஜ்கமல்

ராஜ்கமல்

அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியானது. ரஜினிகாந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் இண்டர்நேஷனல் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இப்போது இயக்கி வருகிறார் லோகேஷ். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் கமல்ஹாசன் நடிப்பதற்காக, கதை சொன்னதாகவும் கதையை கேட்ட கமல், இந்தக் கதை ரஜினிக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவரிடம் கேட்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. கதையை கேட்ட ரஜினிகாந்த் நடிக்க சம்மதித்துள்ளாராம். இந்தப் படத்தை கமல்ஹாசனே தயாரிக்கிறார் என்றும் கூறப்பட்டன.

ஜூன் மாதம்

ஜூன் மாதம்

இந்நிலையில் மார்ச் 5 ஆம் தேதி, இந்த படத்தின் பூஜை சென்னையில் நடக்க இருப்பதாக இணையதளத்தில் செய்திகள் நேற்று வேகமாகப் பரவின. இந்த செய்தியை ராஜ்கமல் தரப்பில் மறுத்துள்ளனர். இப்போதைக்கு பட பூஜை இருக்காது என்றும் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் வரலாம் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X