துபாயை மையம் கொண்ட ரஜினி புயல்... அனல் பறக்கும் 2.0 பாடல் வெளியீட்டு விழா ஏற்பாடுகள்!
துபாயில் 2.0 பாடல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையொட்டி அங்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ரோபோ திரைப்படம் பெரும் வசூலை பெற்றது. நீண்ட நாள்களுக்கு பிறகு ரஜினி இந்த படத்தில் ரோபோ உருவில் வில்லன் போல் தோன்றிய காட்சிகளும் பேசப்பட்டு வந்தன.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் படத்தையும் இயக்குநர் சங்கரே இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இதன் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு துபாய்க்கு பறந்தார். இந்த விழாவில் இயக்குநர் சங்கர், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழா நடைபெறும் துபாயின் புர்ஜ் பார்க்கில் நாற்காலிகள் அமைக்கப்பட்டது குறித்தும், விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்தும் டுவிட்டரில் வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்களுக்கு இசைக் கச்சேரியை நடத்தவுள்ளதால் விழா களைகட்டுவது உறுதி என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











