நவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது ரஜினியின் ‘2.0’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ரஜினியின் 2.0 படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகிறது.
Recommended Video

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' திரைப்படம் வரும் நவம்பர் 29ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ரஜினியை வைத்து இயக்குநர் ஷங்கர் மீண்டும் இயக்கும் படம் 2.0. இப்படத்தில் ரஜினியுடன் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ள இப்படத்திற்கு, நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.

கிராபிக்ஸ் பணிகள்:
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்ட நிலையில், நீண்ட நாட்களாக கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனது படங்களில் பிரம்மாண்டத்தைப் போலவே கிராபிக்ஸிற்கு அதிக முக்கியத்துவம் தருபவர் ஷங்கர். எனவே, தான் மனதில் நினைத்தது போன்ற காட்சிகளைத் திரையில் கொண்டு வர அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
முழுக்க 3டி கேமரா தொழில்நுட்பத்தில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படம் நவம்பர் 29 - ம் தேதி திரைக்கு வரும் என படத்தின் இயக்குநர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நவம்பர் 29ம் தேதி:
அந்த பதிவில், "இறுதியாக படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளை முடித்து தருவதாக விஎஃபெக்ஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும், இதனால் படம் நவம்பர் மாதம் 29 - ம் தேதி திரைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
அக்ஷய்குமார்:
இந்தத் தகவலை லைக்கா நிறுவனம் மற்றும் நடிகர் அக்ஷய்குமாரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் ரஜினியின் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லைக்காவின் திட்டம்:
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











