ரஜினியின் 2.ஓ துபாய் இசைவிழா... கோலாகலமாகத் தொடங்கியது லைவ் நிகழ்ச்சி!
சென்னை: 2.0 படத்தின் பிரமாண்ட இசை விழா கோலாகலமாக துபாயில் இன்று தொடங்கியது.
நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், வில்லன் அக்ஷய் குமார், நாயகி எமி ஜாக்ஸன் உள்ளிட்டோர் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இசை நிகழ்ச்சி இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் வான வேடிக்கை, வெப்பக் காற்று பலூன் பறத்தல், பர்ஜ் கலீஃபா கட்டடத்தில் ரஜினி, அக்ஷய் குமாரின் உருவ ஒளிபரப்பு என கோலாகலத்துடன் 2.ஓ நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்க படத்தின் நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சொகுசு காரில் பர்ஜ் பார்க் அரங்குக்குள் வந்தனர். அவர்களை ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியைக் காண ரஜினியின் மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி உள்ளிட்டோர் வந்தனர். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தமிழில் ஆர்ஜே பாலாஜி, தெலுங்கில் ராணா, இந்தியில் இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர்.


Click it and Unblock the Notifications











