»   »  நவம்பர் 20-ம் தேதி 2.ஓ டீசர்... அடுத்த உலக சாதனைக்கு தயாராகும் சூப்பர் ஸ்டார் படம்! #2.O

நவம்பர் 20-ம் தேதி 2.ஓ டீசர்... அடுத்த உலக சாதனைக்கு தயாராகும் சூப்பர் ஸ்டார் படம்! #2.O

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி நடித்த கபாலியின் டீசருக்குக் கிடைத்த வரவேற்பு உலகறிந்தது. அந்த டீசருக்கு கிடைத்த பார்வைகள், விருப்பங்கள் அனைத்தும் இந்திய சினிமாவை விக்கித்துப் போக வைத்தது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விட்டது.

ரஜினி - ரஞ்சித் காம்பினேஷனுக்கே இப்படி என்றால், ரஜினி - ஷங்கர் கூட்டணிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

Rajinikanth's 2.O teaser on Nov 20th

வரும் நவம்பர் 20ம் தேதி எந்திரன் இரண்டாம் பாகமான 2.ஓ படத்தின் டீசரை வெளியிடப் போவதாக லைக்கா நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளார்.

Rajinikanth's 2.O teaser on Nov 20th

இதைத் தொடர்ந்து, 'தலைவரின் 2.ஓ பட டீசர் வெளியாகிறது. யுட்யூப் நிர்வாகமே திக்கித் திணறாமல் பார்வையாளர் எண்ணிக்கையை உடனுக்குடன் அப்டேட் செய்யும் அளவுக்கு தயாராக இருங்கள்,' ரசிகர்கள் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்துள்ளனர்.

2.ஓ படத்தின் மூன்றில் இரு பங்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இறுதிக் கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

English summary
Lyca Productions officially announced the release date of Rajinikanth starrer 2.O teaser launch ie, Nov 20th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil