ஓப்பன் காரில் கையசைத்து நன்றி சொன்ன சூப்பர் ஸ்டார்!
கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு ரஜினியின் படங்கள் தமிழ்நாட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. ஆனால் ஷங்கர் இயக்கும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.ஓ ஷூட்டிங் சமீபத்தில் திருக்கழுகுன்றத்தில் நடந்து முடிந்தது. அந்த ஷூட்டிங்கில்தான் 'தலைவரின்' ரசிகர்களுக்கு பல இன்ப அதிர்ச்சிகள் கிடைத்தன.
திருக்கழுக்குன்றத்தில் ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் ஆகியோர் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஷூட்டிங் நடக்கும் போது இடையில் யாரும் ரஜினியைப் பார்க்க முடியாது. ஆனால் படப்பிடிப்பு முடிந்ததும் ரசிகர்கள் தன்னுடன் சேர்ந்து படம் எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார். ரஜினியுடன் சேர்ந்து எடுத்த படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்கின்றார்கள் ரசிகர்கள்.

படப்பிடிப்பு முடிந்த கடைசிநாளில் திருக்கழுக்குன்றம் பிரதான தெருவில் ஓப்பன் காரில் எல்லோருக்கும் கையசைத்து நன்றி தெரிவித்துக் கொண்டு சென்றது ரஜினி ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காலைத் தொடங்கும் ஷூட்டிங் பெரும்பாலும் இரவு 7 மணிவரை நடைபெற்று வந்தது.
இப்போதைக்கு இந்தக் காட்சிகளோடு தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். திருக்கழுக்குன்றம் பகுதியில் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், அந்த செட்-டை கழட்டும் பணி நடந்து வருகிறது.
பூந்தமல்லி அருகே எப்போதோ மூடப்பட்டுவிட்ட ஈவிபி தீம் பார்க், இப்போது படப்படிப்புத் தளமாக மாறியிருக்கிறது. அந்த இடத்தில் 2.0 படத்திற்கான செட் அமைக்கப்பட்டு வருகிறது. ரஜினி வந்ததும் ஈவிபி தீம் பார்க்கில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











