twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடிக்காதீங்க... வாழ்க்கையே அழிஞ்சிடும்...! - மக்களுக்கு ரஜினியின் அறிவுரை

    By Shankar
    |

    "ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில்தான் நான் முத்துராமன் அவர்கள் படத்தில் முதன்முறை கதாநாயகனாக நடித்தேன். அந்த படத்தில் அவரால் பஞ்சுவாலிட்டியை கற்றுக் கொண்டேன். அந்தப் படத்தில் நடித்த போது, சொல்ல வெட்கமாக இருக்கிறது, எனக்கு குடிப்பழக்கம் எனும் கெட்ட பழக்கம் இருந்தது. அதனால் என்னால் நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வர முடியவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் அப்படிப் போனேன்.

    ஒரு நாள் எல்லாரையும் அனுப்பிவிட்டு, ஏவிஎம் ஸ்டுடியோவில் எஸ்பிஎம் என்னிடம், 'இதோ பார் ரஜினி... இப்போது நீ ஹீரோ. ஒரு ஹீரோ சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தால்தான், மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரும் நேரத்துக்கு வருவார்கள்.. அதனால நீ முதல்ல ஷூட்டிங்குக்கு வந்துடு,' என்றார். அதன் பிறகு நான் தாமதமாக படப்பிடிப்புக்குச் சென்றதில்லை.

    Rajinikanth's advice to drunkards

    தயவு செய்து குடும்பம், குழந்தைங்கள மட்டும் பாத்துக்கங்க. இந்த குடிப்பழக்கம், புகைப் பிடித்தல் ஆகியவற்றை விட்டுடுங்க. ஏன்னா நான் அடிப்பட்டு சொல்லிட்டிருக்கேன்.

    இந்த குடிப்பழக்கம் பத்திச் சொல்லும்போது, நிறைய பேர் சொல்றதுண்டு... கோடி கோடியா பணம் இருந்தது. ஆனா குடிச்சே எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டான்னு. நான் யோசிப்பேன். என்னய்யா இது.. இவ்ளோ கோடிங்க இருக்கு. ஊருக்கெல்லாம் தண்ணி வாங்கிக் கொடுத்தா கூட இவ்வளவு ஆகாதேன்னு நினைக்கிறதுண்டு. அதெப்டின்னு சொன்னா.. குடிப்பழக்கத்தால உடம்பு மட்டும் கெட்டுப் போகாது. மைண்டும் கெட்டுப் போகும். நம்முடைய யோசனை, சிந்தனை சக்தியே வேற மாதிரி மாறும். அப்டி மாறும்போது நாம எடுக்கற முடிவுகள் எல்லாம் தப்பா போகும். அதனால வாழ்க்கையே அழிஞ்சி போகும். அதனால, குடிப்பழக்கம் இல்லாதவங்க தயவு செஞ்சி தொட வேண்டாம். குடிப் பழக்கம் உள்ளவங்க ஒரேயடியா நிறுத்திடுங்கன்னு சொல்றதுக்கு நீங்க எல்லாம் யோகியா சித்தரா.. கிடையாது. ஏதோ ஒரு கொண்டாட்டத்துல சந்தர்ப்பத்துல அதை என்ஜாய் பண்ணுங்க."

    - ரஜினிகாந்த்

    English summary
    Here is Rajinikanth's advice to drunkards at his fans meet speech
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X