"அண்ணாத்த" அடுத்த வாரம் படப்பிடிப்பு... ரஜினியுடன் இணையும் 2 நாயகிகள்!

சென்னை: ரஜினி, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் தான் அண்ணாத்த.

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இமான் இசை அமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சிவா - ரஜினி கூட்டணி முதல் முறையும், சிவா - இமான் கூட்டணி இரண்டாவது முறையும் இந்த படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்திற்கு முன்னுரிமை

அண்ணாத்த படத்திற்கு முன்னுரிமை

ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து டிசம்பர் 31 அறிவிக்க இருக்கிறார். அதை குறித்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் தனது பணிகள் முடிந்த பிறகே முழுவதுமாக அரசியல் களத்தில் பணியாற்ற உள்ளதாக அண்ணாத்த படத்திற்கு முன்னுரிமை அளித்து பேசி உள்ளார்.

சிவாவுக்கு நடந்த துயரம்

சிவாவுக்கு நடந்த துயரம்

ரஜினிகாந்த் அரசியல் பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் படப்பிடிப்பு பணிகள் வெகு விரைவாக முடியும் என எதிர்பார்க்கபட்டது இந்த நிலையில் இயக்குனர் சிவாவின் தந்தை சமீபத்தில் காலமானார். இந்த துயரத்தின் காரணமாக படப்பிடிப்பு சற்று தாமதமாக அடுத்த வாரம் தொடங்க உள்ளது.

முக்கிய கட்டத்தில் படப்பிடிப்பு

முக்கிய கட்டத்தில் படப்பிடிப்பு

நடிகை நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். அவர்களின் முக்கிய காட்சிகள் அடுத்த வார படப்பிடிப்பில் எடுக்க உள்ளதாக தெரிகிறது. இவர்களை தவிர்த்து மீனா, குஷ்பு ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

கோடை விடுமுறையில் ரிலீஸ்

கோடை விடுமுறையில் ரிலீஸ்

2021 பொங்கலுக்கு திரைக்கு வர வேண்டிய அண்ணாத்த திரைப்படம் தொடர் சிக்கல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு வருகிற 15ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது என சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து 2021 கோடை விடுமுறைக்கு படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X