வெறும் 7 நாளில் 200 கோடி வசூலை குவித்த அண்ணாத்த.. டிரெண்டாகும் #Annaatthe200CrWWInAWeek

சென்னை: இரண்டே நாட்களில் 100 கோடி வசூலை ஈட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் 7 நாட்களில் 200 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தங்கச்சி பாசம் கலந்த ஆக்‌ஷன் கதையாக தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த.

இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அண்ணாத்த ஆட்டம்

அண்ணாத்த ஆட்டம்

விமர்சன ரீதியாக கழுவி ஊற்றப்பட்டாலும் தி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருப்பதால் வசூலில் பேய் வேட்டையை நடத்தி வருகிறது அண்ணாத்த திரைப்படம். இயக்குநர் சிவாவும் பேட்டிகளில் விமர்சனங்கள் பற்றி தனக்கு எந்தவொரு கவலையும் இல்லை என்றும் ரஜினிகாந்த் தனது முழு உழைப்பை படத்தில் கொடுத்து இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

மிகப்பெரிய பிளஸ்

மிகப்பெரிய பிளஸ்

தர்பார் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்த நிலையில், அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது. குடும்ப திரைப்படமாக அண்ணாத்த திரைப்படம் அண்ணன் தங்கை சென்டிமென்ட் உடன் வெளியானது தான் இந்த படத்தின் மிகப்பெரிய சக்சஸ் என்றும் கூறுகின்றனர். நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அண்ணாத்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பிளஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

2 நாட்களில் 100 கோடி

2 நாட்களில் 100 கோடி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதிலும் எப்படி இவ்வளவு யங்காகவும் எனர்ஜெடிக்காகவும் நடிக்கிறார் என்பதை திரையரங்குகளில் ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர். உலகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியான அண்ணாத்த திரைப்படம் முதல் 2 நாட்களிலேயே 100 கோடி வசூலை தாண்டியது.

200 கோடி சம்பவம்

200 கோடி சம்பவம்

தீபாவளி விடுமுறையை முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டு 150 கோடி வசூல் வேட்டையை நடத்திய அண்ணாத்த திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டி மிகப்பெரிய சம்பவத்தை நிகழ்த்தியுள்ளதாக டிராக்கர்கள் கணித்துள்ளனர். தமிழ் நாட்டில் மழை இப்படி வெளுத்து வாங்கி வரும் நிலையிலும் அண்ணாத்த படம் இந்த அளவுக்கு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்திருப்பது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

தடைகளை தாண்டி

தடைகளை தாண்டி

#Annaatthe200CrWWInAWeek எனும் ஹாஷ்டேக்கை தற்போது பதிவிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள், கன மழை என பல தடைகளை கடந்து சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் இந்த சாதனையை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X