அண்ணாத்த தீபாவளிக்கு ரெடியா... ரிலீஸ் தேதியுடன் மாஸாக வெளியான அண்ணாத்த ஃபஸ்ட்லுக்

சென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. ரஜினியின் பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் அண்ணாத்த.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து, பொழுதுபோக்கு கதையாக அண்ணாத்த உருவாக்கப்பட்டு வருகிறது.

2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால் படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பு சில மாதங்கள் நிறுத்தப்பட்டது.

முதல் ஆளாக வேலையை முடித்த ரஜினி

முதல் ஆளாக வேலையை முடித்த ரஜினி

பிறகு இந்த ஆண்டு துவக்கத்தில் மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்கி, விறுவிறுப்பாக நடைபெற்றது. மே மாதத்திலேயே ரஜினி தான் நடிக்க வேண்டிய காட்சிகள், டப்பிங் வேலைகளை முடித்து விட்டார். தற்போது மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு

மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு

இதற்கிடையில் லாக்டவுன் முடிந்து படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. தற்போது குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்க வேண்டிய காட்சிகளை நடித்து வருகின்றனர்.

மாஸாக வந்த ஃபஸ்ட்லுக்

மாஸாக வந்த ஃபஸ்ட்லுக்

இந்நிலையில் இன்று அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை, ரிலீஸ் தேதியுடன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் ரஜினி திரும்பி நிற்பது போலவும், அவருக்கு எதிரில் ஏராளமானோர் கையில் வேல் கம்புடம் நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அண்ணாத்த தீபாவளிக்கு ரெடியா என்ற கேப்ஷனுடன் இந்த ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாத்த தீபாவளி

அண்ணாத்த தீபாவளி

நவம்பர் 4 ம் தேதி அண்ணாத்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸின் இந்த அறிவிப்பை அடுத்து ட்விட்டரில் ரஜினிகாந்த், அண்ணாத்த, அண்ணாத்ததீபாவளி, நயன்தாரா போன்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்டிங் ஆகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X