விஸ்வாசம் டச்.. அண்ணாத்த படத்தின் அடுத்த ஷெட்யூல் எங்கே தெரியுமா? பாலிவுட் வில்லன் வேறயாம்!
சென்னை: ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ஹைதராபாத் ஷூட்டிங் நிறைவு பெற உள்ளது. அடுத்ததாக அண்ணாத்த படக்குழு எங்கே ஷூட்டிங் நடத்த உள்ளனர் என்ற தகவல் கசிந்துள்ளது.
Recommended Video
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு அண்ணாத்த என்ற அட்டகாசமான தலைப்பை வைத்துள்ளார் இயக்குநர் சிவா.
இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என 4 நாயகிகள் நடித்து வருகின்றனர்.

முடியப்போகுது
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சில இடங்களில் நடந்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் தனது முதல் ஷெட்யூலை நிறைவு செய்கிறது. ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்ட பலர் ஹைதராபாத் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர்.

கொஞ்சம் ரெஸ்ட்
மார்ச் முதல் வாரத்தில், சென்னைக்கு வரும் அண்ணாத்த படக்குழு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துவிட்டு, அடுத்தபடியாக, வட மாநிலங்களில் ஷூட்டிங் நடத்த உள்ளனர். விஸ்வாசம் படத்தை போலவே, அண்ணாத்த படத்திலும், வடமாநிலத்தில் படப்பிடிப்புகள் நடக்க உள்ளதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.

அடுத்த ஷெட்யூல் எங்கே?
2 வார ஓய்வுக்கு பிறகு, மார்ச் மாதம் 15ம் தேதிக்கு மேல், மீண்டும் தொடங்கவுள்ள அண்ணாத்த படத்தின் ஷூட்டிங், புனே மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக லொகேஷன் மேனேஜர்கள் அந்த பகுதிகளில் முகாமிட்டு, ஷூட்டிங் நடத்துவதற்கான லொகேஷன்களை உறுதி செய்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர்
புனே மற்றும் கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஷூட்டிங்கின் போது, ரஜினிகாந்த் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் மோதும் சண்டை காட்சிகள் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. காலா படத்தில் நானா படேகர், 2.0 படத்தில் அக்ஷய் குமார், பேட்ட படத்தில் நவாஜுதின் சித்திக், தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி நடித்த நிலையில், மீண்டும் ஒரு பாலிவுட் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார்.

மெட்ராஸ் பாஷை
சென்னை லோக்கல் ஸ்லாங்கில் தான் 'அண்ணாத்த' என அழைப்பார்கள். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இளையராஜா இசையில் உருவான "அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ" பாடலின் தொடக்க வரியான 'அண்ணாத்த' சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168வது படத்துக்கு டைட்டிலாக அமைந்துள்ளது. இந்த படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











