அண்ணாத்த ஆட்டம் ஆரம்பம்.. வேட்டி சட்டையில் கெத்தா மிரட்டும் ரஜினிகாந்த்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

Recommended Video

D. IMMAN EXCLUSIVE | OTHER LANGUAGE MUSIC ஏன் பண்றதில்ல ? | FILMIBEAT TAMIL

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்

அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்

தற்போது வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டி சட்டையில் கெத்தாக மிரட்டும் லுக் வெளியாகி இருக்கிறது. இந்த தீபாவளி தலைவர் தீபாவளி தான் என ரஜினி ரசிகர்கள் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

சிங்கம் சிங்கிளா தான் வரும்

சிங்கம் சிங்கிளா தான் வரும்

அண்ணாத்த படத்தில் பெரும் நடிகர்கள் பட்டாளமே உள்ள நிலையில், பெருங்கூட்டத்துடன் விநாயகர் சதுர்த்திக்கு ஃபர்ஸ்ட் லுக் வரும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், சிங்கம் சிங்கிளா தான் வரும் என்பது போல வேட்டி சட்டையில் திருவிழா பேக் ட்ராப்பில் கோயில் மணிகள் சுற்றி இருக்க, காலடியில் அருவா ஆயுதங்கள் நிறைந்திருக்க ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டுகிறது.

என்ன அழகு

என்ன அழகு

பட்டு வேட்டி பட்டு சட்டையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இருந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ஏற்கனவே கசிந்த நிலையில், அதே உடையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. அசத்தலான கோயில் திருவிழா ஓப்பனிங் சாங்கில் இந்த காட்சி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

70வயதிலும் அதே எனர்ஜி

70வயதிலும் அதே எனர்ஜி

நடிகர் ரஜினிகாந்த் 70 வயதிலும் அதே எனர்ஜி குறையாமல் முன்னணி ஹீரோவாக தமிழ் திரையுலகையே கலக்கி வருகிறார் என ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ஏகப்பட்ட பிரபலங்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்கை அண்ணாந்து பார்த்து வருகின்றனர்.

விஸ்வாசம் எஃபெக்ட்

விஸ்வாசம் எஃபெக்ட்

தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை முன்னதாக இயக்கி இருந்த இயக்குநர் சிறுத்தை சிவா அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் தல அஜித் புல்லட்டில் திருவிழா பேக் ரவுண்டில் இருப்பது போலவே போஸ்டரை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் திருவிழா பேக் ரவுண்டில் இருப்பதால் விஸ்வாசம் எஃபெக்ட்டா என்றும் தல ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

சன் பிக்சர்ஸ் அறிவித்ததை போலவே இந்த ஆண்டு தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக காத்திருக்கிறது. வரும் நவம்பர் 4ம் தேதி படம் வெளியாகும் என்கிற அறிவிப்புடன் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பட்டையை கிளப்புகிறது.

வலிமையுடன் மோதலா?

வலிமையுடன் மோதலா?

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து 4 படங்கள் பண்ண அஜித் அவருடன் நேரடி மோதலில் ஈடு பட மாட்டார் என்றும் வலிமை ரிலீஸ் டிசம்பருக்கு தள்ளிப் போகும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X