செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

படக்குழுவில் கொரோனா
இந்நிலையில் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய எஞ்சிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு தொடங்கியது.
ஆனால் படக்குழுவில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

உடல்நலக்குறைவு
இதனை தொடர்ந்து ரஜினிக்கும் உடல்நலக் குறைவு எற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பருக்குள் படத்தை முடித்து விட்டு அரசியலில் இறங்கும் முடிவில் இருந்தார் ரஜினி. ஆனால் திடீர் உடல் நலக்குறைவால், அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார்.

அண்ணாத்த ரிலீஸ் தேதி
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
நவம்பர் மாதம் 4ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகிறது. ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் வரும் தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











