கிராமத்தானாக கோபப்படும் ரஜினிகாந்த்... காட்டாறு... வெளியானது அண்ணாத்த டீசர்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்தா. இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.

இதேபோல் பிரகாஷ் ராஜ், ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, வேல மூர்த்தி, சூரி, சதீஷ் உட்பட பெரும் ரசிகர் பட்டாளமே நடிக்கின்றனர்.

அண்ணாத்த சிங்கிள் ட்ராக்ஸ்

அண்ணாத்த சிங்கிள் ட்ராக்ஸ்

இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டு சிங்கிள் ட்ராக்குகள் வெளியானது.

இரண்டாவது சாரக் காற்றே

இரண்டாவது சாரக் காற்றே

இதில் முதல் சிங்கிள் ட்ராக் மறைந்த எஸ்பி பாலசுப்பிரமணியம் ரஜினிகாந்துக்காக பாடிய பாடல். இரண்டாவது சிங்கிள் நயன்தாராவுடன் சாரக் காற்றே என்ற மெலடி பாடல் ஆகும். இந்த பாடல் ரொமான்டிக் பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

கோபப்பட்டு பார்த்ததில்லையே..

கோபப்பட்டு பார்த்ததில்லையே..

அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இதில் கிராமத்து ஆளாக தெறிக்கவிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். டீசர் ஓபனிங்கிலேயே மாஸ் சிரிப்புடன் கிராமத்தான குணமா தான பார்த்திருக்க.. கோபப்பட்டு பார்த்ததில்லையே.. காட்டாறு... அவனுக்கு கரையும் கிடையாது.. தடையும் கிடையாது என்ற வசனங்களுடன் தெறிக்கவிட்டுள்ளார்.

ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை

ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை

மேலும் கையில் வீச்சருவாள், அடிதடி.. வெட்டு என மிரட்டியுள்ளார் ரஜினிகாந்த். பின்னணியில் வா சாமி என்ற பிஜிஎம்முடன் இமான் இசையும் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. சிரிப்புடன் தொடங்கிய டீசர் சிரிப்புடன் முடிந்துள்ளது. டீசரை பார்க்கும் போதே படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

1000 மெகா வாட் மின்சாரம்

1000 மெகா வாட் மின்சாரம்

அண்ணாத்த படத்தின் புரமோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், 1000 மெகாவாட் மின்சாரம் பவர்.. எதிரில் நிற்பவர்கள் சாம்பல் தான்...கொலகாண்டுல இருக்காரு தலைவர் எ பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கரையும் கிடையாது.. தடையும் கிடையாது...

கரையும் கிடையாது.. தடையும் கிடையாது...

அண்ணாத்த படத்தின் டீசரை பார்த்த இந்த ரசிகர் ரஜினி பேசும் டயலாக்கை குறிப்பிட்டுள்ளார். காட்டாறு.. அவனுக்கு கரையும் கிடையாது.. தடையும் கிடையாது... ஆஆஆஆஆ.அட்றா.. தலைவா என புகழ்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X